படையினரிடம் சரணடைகின்ற விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களுக்கு விசேட தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சரணடைக்கின்ற இருபாலாருக்குமான இந்த பயிற்சிகள் மே மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.
விசேடமாக நிறுவப்பட்டுள்ள தொழிற்பயிற்சி புனருத்தாபன பயிற்சி முகாம்களிலேயே இந்த பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன. அதற்காக மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் விசேட பயிற்சி முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகளுக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் உதவிவருவதாகவும் இதர நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்யிற்சி முகாம்களில் பயிற்சிகளை முடிக்கின்ற புலிகள் அமைப்பை சேர்ந்த இளைஞர்,யுவதிகளுக்கு தகுதிக்கேற்ப தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி இணையம் 4/21/2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment