Thursday, April 17, 2008

முஷாரப் பாலியல் கவர்ச்சியுள்ள மனிதர்



பாகிஸ்தான் அழகுராணி தெரிவிப்பு


பாகிஸ்தான் ஜனாதிபதி முஷா ரப் பாலியல் ரீதியில் கவர்ச்சிகரமான ஒரு மனிதர் எனத் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாகிஸ்தானிய அழகுராணியான மஹ்லீஜ் சர்காரி.
தன்னுடைய பெயரிலான இணையத்தளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே மஹ்லீஜ் சர்காரி இவ்வாறு தெரிவித் துள்ளார்.

"பாகிஸ்தான் மக்களுக்கான ஒரு சிறு குறிப்பு. சர்வதேச அழகுராணிப் போட்டிக்கு செல்லும் அனைத்து இளம் பெண்களும் முஷாரப்பைப் பற்றி எவ்வாறு நினைக்கிறார்கள் என்று நாம் கண்டறிந்துள்ளோம். அனைவரும் அவரைப் பற்றி நல்லவிதமான கருத்தையே கொண்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்த மஹ்லீஜ் சர்காரி, "முஷாரப் சஹாப் மிக சிறந்த தோற்றமுடையவர் என்பது தனிப்பட்ட முறையில் எனது கருத்தாகும். எனினும் சில பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். ஆனால் இங்கே அவர்கள் (அழகு ராணிகள்) அவரை முத்தமிட்டுக் கொண்டி ருக்கின்றனர்'' என தெரிவித்திருந்தார்.

"உலகிலுள்ள அனைத்து ஆண்களும் பெனாஸிரை ஒரு அழகியாக கருதுவது போல, முஷாரப் ஒரு பாலியல் ரீதியான கவர்ச்சியுள்ள ஒருவர். அவரிடம் அழகு ராணி தகுதியுள்ள இளம் பெண்களை தன் பக்கம் ஈர்ப்பதற்கு போதுமான ஆகர்ஷ சக்தி உள்ளது" என மஹ்லீஜ் சர்காரி கூறினார்.

தன்னுடன் நாளைக் கழிக்க வரும்படி முஷாரப் அழைப்பு விடுப்பாராயின், அவருடன் செல்ல எப்போதும் தயாராக இருப்பதாக கூறிய மஹ்லீஜ் சர்காரி, ""நான் அவரை மிகவும் விரும்புகிறேன்'' என தெரிவித்தார்.

No comments: