Thursday, April 17, 2008

"மக்கள் ஓசை' பத்திரிகை மலேஷிய அரசால் தடை

மலேஷியாவில் வெளிவரும் "மக்கள் ஓசை' என்ற முன்னணி தமிழ் பத்திரிகையை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது.
அரசியல் சமூக விடயங்களில் "மக்கள் ஓசை' தினசரிப் பத்திரிகை கடந்த சில வாரங்களாக கடுமையாக சாடி வந்ததாகவும் இதையடுத்தே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக சர்வதேஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள "மக்கள் ஓசை'யின் செய்தி ஆசிரியர் பி.ஆர். ராஜன், "மக்கள் ஓசை' பத்திரிகை இயங்குவதற்கான அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சிடமி ருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை எமக்கு அறிவித்தல் கடி தம் கிடைத்தது.

அக்கடிதத்தில், அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

இதனால், "மக்கள் ஓசை' பத்திரிகை நேற்று வெளிவரவில்லை.

மக்கள் ஓசை 15 ஆண்டுகளாக வாரப் பத்திரிகையாக வெளி வந்த பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தினசரியாக வெளிவந்து கொண்டிருந்தது.

No comments: