நாளை புதிய வருடம் பிறக்கின்றது. இந்தப் புதிய வருடத்தைக் கொண்டாட நாட்டின் ஒரு பகுதி மக்கள் தயாராகி வரும் நிலையில், மறுபகுதி மக்கள் துயரங்களினாலும் ஏக்கங்களினாலும் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
நாட்டில் தொடரும் யுத்த சூழ்நிலை காரணமாகவே மக்கள் இவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், பரிதாப வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், புதுவருட தினத்திலேனும் உற் றார், உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாதவர்களாகவே உள்ளனர்.
குறிப்பாக, போர் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய சீரற்ற காலநிலைக்கு மத்தியில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் என பலரும் பல்வேறு வகையான கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் தொடர்பில் எவரும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
இதேவேளை, மன்னார் இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசத்திலுள்ள அனைத்துக் கிராமங்களும் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களாக மாறி வருகின்றன. தற்போது மாந்தை மேற்கு பிரதேசெயலகப் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் ஏழாயிரத்து இருநூறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என மன்னார் அரசாங்க அதிபர் ஏ.
நிக்லஸ்பிள்ளை தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பொருட்களின் தாமதம் மற்றும் மழை, வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அவலத்துக்குள்ளாகி உள்ள தாக குறிப்பிட்டுள்ள அரசாங்க அதிபர், மன்னார் மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளன. இங்கு மேற்கொள்ளப் படும் ஷெல் தாக்குதல்கள் மற்றும் இருதர ப்பு மோதல்கள் காரணமாக மக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது. முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் மடுவில் தங்கியிருந்தனர். பின்னர் அங்கிருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து சென் றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில், 7200 குடும் பங்களைச் சேர்ந்த 25,000 க்கும் அதிகமான மக்கள் அங்கு தங்கியிருப்பதாகவும் மோதல்கள் காரணமாக மக்கள் தொடர்ச்சியாக இடம் பெயர்ந்து வருவதால் இத்தொகை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள், அங்குள்ள பொதுக் கட்டிடங்கள், உற்றார், நண் பர்களின் வீடுகள் மற்றும் மர நிழல்களின் கீழ் சிறிய குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக மிகுந்த அவலங்களுக்கு உள்ளாகி யிருக்கும் இவர்கள், உணவு மற்றும் அடிப்படை வசதிகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, தமது அனைத்து உடைமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இம்மக்கள், முழுக்க முழுக்க அரசாங்கத்தின் நிவாரணங்களையே நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில், நிவாரணப் பொருட்களை அங்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுமானால், மக்கள் உணவின்றி பேரவ லங்களை எதிர்நோக்க நேரிடும்.
இதேவேளை, நிவாரணப் பொருட்களை அங்கு கொண்டு செல்வதில் தாமதம் நிலவுவதால் அகதிகளான மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிலங்குளம் நுழைவாயில் மூடப்பட்டுள்ளதன் காரணமாக நிவாரணப் பொருட்களை ஓமந்தை நுழைவாயிலூடாகவே கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 80 கிலோமீற்றர் மேலதிகமாகப் பய ணிக்க வேண்டியுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகள் காரண மாக மிகுந்த கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படு கின்றது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்படையச் செய் யாது தேவையான நிவாரணப் பொருட்களை காலதாமதமின்றி உடனடியாக அனுப்பி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண் டும். ஏலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பல தம்மாலான உதவிகளை வழங்கி வந்தன.
இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது பெரும் ஆறுதலாக அமைந்திருந்தது. தற்போதைய சூழ்நிலை காரணமாக பெரும்பாலான தொண்டர் அமைப்புக்கள் அங்கிருந்தும் வெளியே றியுள்ளதால் மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே, தற்போதைய காலநிலையைக் கருத்தில் கொண்டு உணவுக்காகவும் மருந்துக்காகவும் இதர அடிப்படைத் தேவை களுக்காகவும் பரிதவிக்கும் மக்களின் துயரைத் துடைக்க சம்பந்தப் பட்ட அனைவரும் நடவடிக்கை எடுப்பது மிகவும் இன்றியமை யாததாகும்.
யுத்த நடவடிக்கைகள் தொடருமானால் மக்கள் பெருமளவில் இடம்பெயர நேருவதுடன், பாரிய நெருக்கடிகளையும் அவர்கள் சந்திக்க நேரும். இதன் காரணமாகவே இராணுவ நடவடிக்கை களைக் கைவிட்டு தேசிய இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. மாறாக தொடர்ந்து வரும் மோதல்கள் காரணமாக தமிழ் மக்களே நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், தமது சொந்த நாட்டி லேயே அகதிகளாகி வருகின்றனர். எனவே, இந்நிலைமை தொட ராதிருப்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உறுதி செய்வது மிகவும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment