டாக்டர்கள் தங்கள் பெயர்ப் பலகையில், "ரெட் கிராஸ்' (செஞ்சிலுவை) சின்னம் போடுவதை பார்த்திருப்பீர்கள்; குஜராத்தில் உள்ள டாக்டர்கள் இதை எடுத்து விட்டு, "ஸ்வஸ்திக்' சின்னத்தை சித்தரித்துள்ளனர்.
"சங் பரிவார்' அமைப்பில் உள்ள டாக்டர்கள் எல்லாரும், இப்படி திடீர் மாற்றம் செய்துள்ளனர். இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்து,ஜைன,புத்த,ரோமன் கத்தோலிக்க மதத்தினர், பல ஆண்டுக்கு முன்னதாக, "ஸ்வஸ்திக்' சின்னத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், ஜெர்மனியில் உள்ள நாஜி இனத்தவர், இந்த "ஸ்வஸ்திக்' சின்னத்தை பயன்படுத்தியதை அடுத்து, இந்த சின்னம் சர்ச்சைக்கிடமாகி விட்டது.அதன் பின்,செஞ்சிலுவை சின்னம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், நாஜிக்கள் தங்கள் சின்னமாக, இரும்பு சட்டத்தை மேல், குறுக்காக போட்டு "ஸ்வஸ்திக்' போல சித்தரித்தனர். ஆனால், உலகமுழுவதும் டாக்டர்கள் பயன்படுத்திய "ஸ்வஸ்திக்' சின்னம் வேறுபட்டது. எனினும், சர்ச்சை கிளம்பியதை அடுத்து அதை பல நாடுகளும் பயன்படுத்த மறுத்தனர்.
இப்போது குஜராத்தில் உள்ள இந்து மத டாக்டர்கள் பலரும், "ஸ்வஸ்திக்' சின்னத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். முன்பு பயன்படுத்தியது போல இல்லாமல், "ஸ்வஸ்திக்' சின்னத்தில், நான்கு கட்டங்களில் புள்ளிகள் வைத்து சித்தரித்துள்ளனர். இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கம் விசாரணை செய்து வருகிறது. டாக்டர் சின்னத்தை மாற்றியது குறித்து, குஜராத் மருத்துவ சங்கத்திடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளது.
தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment