நளினியை பிரியங்கா சந்தித்ததில் தவறில்லை என்று மதுரை ஆதீனம் கூறினார்.
வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க புதன்கிழமை வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறியது: வேலூர் சிறையில் உள்ள நளினியை ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்ததில் தவறில்லை. இதில் இருவருக்குமே மனநிறைவு ஏற்பட்டுள்ளது.
தந்தையை இழந்த பிரியங்கா கதறியுள்ளார். ஆத்திரத்தால் தவறு செய்துவிட்டதாக நளினி உணர்ந்துள்ளார்.ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேறுமா? என்று கேட்கிறீர்கள். ஆகாமல் போனாலும் போகலாம்.
இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பல்வேறு நாடுகளில் பேசியுள் ளேன். அவர்களுக்கு நல்வாழ்வு தர வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசும் இந்திய அரசும் விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்.
கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்றம் செய்யக் கூடாது. நாட்டில் சாதி, மதங்களால் எவ்வித கலவரமும் ஏற்படக் கூடாது.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். இத னால் சமுதாயத்தில் சீர்கேடு, ஒழுக்கக் கேடு நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார் மதுரை ஆதீனம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment