
திருமணமாகி குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், 25 வயது இளம் மனைவி, ஆணாக மாறிக்கொண்டிருக்கிறார். இதனால், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள நரோடா பகுதியில் வசிப்பவர் ஜாஷு ரதோட்; கணவன் ரதோட், கூலி வேலை செய்கிறார்.
ஜாஷு ரதோட் எடை கடந்த சில ஆண்டாக அதிகரிக்க ஆரம்பித்தது. தோல் பகுதிகள் ஆண்களை போல தடிமனாக மாறியது, நிறமும் மாறியது. கேசம் வளர ஆரம்பித்தது. இப்போது ஆணாகவே மாறி விட்டார்.இப்போது, ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்தனர். இவருக்கு "அக்ரோமெகாலை' என்ற சுரப்பிக் கோளாறு நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது:இந்த சுரப்பிக் கோளாறு நோய், ஐந்து லட்சம் பேரில் மூன்று பேருக்கு தான் வரும். உடலில் உள்ள "பிட்யூட்ரி' சுரப்பியில் கோளாறு ஏற்படும். இது பாதித்தவர் ஆணாக இருந்தால், அவருக்கு பெண்ணுக்கு உரிய சுரப்பிகள் ஏற்படும். பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருந்தால், ஆணுக்குரிய சுரப்பிகள் ஏற்படும்.

No comments:
Post a Comment