வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை அவரது மகள் ஸ்ரீகரன் மேகரா சந்திக்க வருகிறாள்.
நளினியை, சமீபத்தில் பிரியங்கா சந்தித்த பின் நளினி குடும்பத்தினர் இதற்கான ஏற்பாட்டில் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை கடந்த மார்ச் 19-ம் தேதி பிரியங்கா ரகசியமாக சந்தித்தார்.
இந்தச் சந்திப்பை பிரியங்காவும் உறுதி செய்துள்ளார்.
இந்த சந்திப்பால் நளினியின் மகள் மேகரா மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
செங்கற்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நளினி கர்ப்பமாக இருந்தார்.
1992-ம் ஆண்டு செங்கற்பட்டு அரசு மருத்து வமனையில் மேகரா பிறந்தார்.
கடந்த 16-ஆண்டுகளில் தனது தாய் நளினியை இரண்டு முறை மட்டும் பார்த்துள்ளார் மேகரா. கடைசியாக 1996-ம் ஆண்டு வேலூர் சிறையில் நளினியை சந்தித்துள்ளார்.
இலங்கையில் உள்ள நளினியின் பெற்றோர் பாதுகாப்பில் உள்ள மேகரா, தற்போது அங்கு இண்டர்மீடியட் படிப்பை முடித்துள்ளார். பள்ளிக்கு கோடை விடு முறை விடப்பட்டுள்ளதால் பாட்டி வீட்டில் உள்ள மேகராவுக்கு தனது தாயைப் பிரியங்கா சந்தித்து பற்றித் தெரியவந்தது.
இதையடுத்து தானும் தாயை சந்திக்க வேண்டும் என மேகரா ஆர்வமாக உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறினர்.
இதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், மற்றும் இந்திய அரசின் அனுமதியை பெறுவதில் நளினியின் குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் நளினியை நேரில் சந்திக்க கடந்த 6 ஆண்டுகளாகவே பிரியங்கா ஆர்வம் காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
வேலூர் சிறையில் உள்ள நளினி அவ்வப் போது சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 2002-ம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன் றில், 1999-ம் ஆண்டு கைதாகும் முன் எம்.ஏ (பொருளாதாரம்) படித்திருந்ததாகவும், சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் எம்.சி.ஏ (75 சதவீதம் மதிப்பெண்), சி.எப்.என் (93 சதவீதம்), சி.ஐ.சி (89 சதவீ தம்), பி.பி.சி (90சதவீதம்), பி.ஜி.டி.சி.ஏ (68 சதவீதம்) மற்றும் டெய்லரிங், எம்பிராயர் டரி பயிற்சி முடித்ததாகவும் கூறியுள்ளார்.
இக்கடித்தை சோனியா படித்த பின்னர், நளினிக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தனது தனிச் செயலாளர் மூலம் தெரிவித் துள்ளதாக வழக்கறிஞர் துரைசாமியின் ஜூனியர் வழக்கறிஞர் இளங்கோவன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக அது குறைக்கப் பட்ட பின்னர் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
பொதுவாக ஆயுள் தண்டனை காலம் 14 ஆண்டுகள். ஆனால் நளினி இதையும் கடந்து சிறையில் உள்ளதால் அவரை விடு தலை செய்ய மனு செய்யப்பட்டது. இதன் பேரில் வேலூர் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மற்றும் எஸ்.பி ஆகியோரைக் கொண்ட குழு விசாரணை நடத்தி, நளி னியை விடுதலை செய்வது உகந்தது அல்ல என மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட நளினி வழக்கறிஞர்கள் தயாராகி வருகின்றனர்.
Friday, April 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment