ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அங்கத்துவத்தை இழந்ததாக அறிவிக்கப்பட்ட இருபத்துநாலு மணி நேரத்துக்குள்ளேயே ஸ்ரீலங்காவில் துரதிர்ஷ்ட வசமாக மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. இவ்வாறு நேஷன் பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய ஊடகவியலாளர் கீத் நோயார் இனம்தெரியாத ஆயுத பாணிகளால் கடத்தப்பட்ட சம்பவம் ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் பாதுகாப்புக்குச் சவாலாக நிகழ்ந்துள்ளது.
அதுமட்டுமன்றி ஸ்ரீலங்கா மனித உரிமைகள் சபை உறுப்புரிமை இழந்த 24 மணிநேரத்துக்கு முன்னர் நிகழ்ந்த மற்றுமொரு பாரதூரமான சம்பவம் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகர மத்திய பகுதியில் வைத்தே மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் ஆயுதக் குழுவைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் இனம்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆத்திரம் கொண்ட பிள்ளையான் குழுவினர் காத்தான்குடியிலும் மற்றும் ஏனைய பகுதிகளிலும் மேற்கொண்ட சூட்டுத் தாக்குதல்களினால் பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயங்களுக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து தமிழர் முஸ்லிம்கள் மோதல்களாக சம்பவங்கள் ஏற்படுவதை பொலிஸ் தரப்பும் விசேட நடவடிக்கை பிரிவும் மற்றும் பிரமுகரும் இணைந்து பெரும் சிரமத்தின் மத்தியில் மத்தியஸ்தம் செய்து தடுத்துள்ளது. எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவினருக்கும் முஸ்லிம் தரப்பினருக்கும் மற்றும் பொது மக்களுக்கும் இடையே சுமுகமான நிலை இன்னும் ஏற்படவில்லை.
ஆயுதம் தாங்கிய குழுவினர் இளைஞர்கள் யுவதிகளைக் கடத்தி சென்ற சம்பவங்கள் மட்டக்களப்பில் நிகழ்ந்துள்ளன.
அத்துடன் குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்தில் கூடுதல் பதற்ற நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெனீவாவில் மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்கா உறுப்புரிமை இழந்த சொற்பநேரத்தில் மனித உரிமை மீறல்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதும் அவை தொடர்ந்தும் ஊடகவியலாளர் உட்பட பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்புக்கு எதிரான துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் என்றே கருதவேண்டும்.
லங்காதீப விமர்சனம் : 28.05.2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment