Tuesday, May 13, 2008

ஞாயிறு மதிய உணவிற்காக 442 கி.மீ பயணம் செய்யும் முதியவர்

பிரிட்டனைச் சேர்ந்த 74 வயதான டொனி லா என்பவர் ஞாயிறு மதிய உணவுக்காக வாரந்தோறும் 442 கிலோமீற்றர் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும் இத் தகவலுக்கு சொந்தக்காரரான டொனி ஞாயிறு காலை 6 மணிக்கு தனது காரில் வீட்டை விட்டு புறப்படுகிறார்.

லாங் இட்சிங்டன் என்ற சொந்த ஊரில் இருந்து 201 கி.மீ.தூரம் பயணம் செய்து போர்ட்ஸ் மவுத் என்ற நகரை வந்து அடைகிறார். அங்கு இருந்து மோட்டார் படகில் விக்ட் தீவுக்கு புறப்படுகிறார். அங்கிருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள டியூக் ஆப்யோர்க் என்ற இடத்தை அடைகிறார். அங்குள்ள உணவு விடுதியில் அவருக்கு ஒரு மேசை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு மது அருந்தி விட்டு, உணவு உட்கொள்கிறார். இந்த உணவு அவருக்கு விருப்பமானதாக இருக்கிறது. இந்த உணவுக்காக தான் அவர் 25 ஆண்டுகளாக இந்த விடுதிக்கு செல்கிறார்.

முதன்முதலாக 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விடுதிக்கு சென்றார். அதைத்தொடர்ந்து வாராவாரம் அந்த விடுதிக்கு அவர் செல்கிறார்.

சாப்பிட்டு முடித்ததும், அங்கிருந்து புறப்பட்டு போர்ட்ஸ் மவுத் நகருக்கு இரவு வந்து சேருகிறார். மறுநாள் புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் வீடு வந்து சேருகிறார்.

No comments: