Thursday, May 8, 2008

60 வயதாகும் இஸ்ரேல்

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவை அந்த நாடு கொண்டாடுகிறது.

இஸ்ரேலின் பல நகரங்கள் மீது இராணுவ விமானங்களின் அணிவகுத்துச் சென்றதை மையப்படுத்தியே வியாழன் அன்றைய கொண்டாட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன.

தலைநகர் டெல்-அவிவில் வானிலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் நிகழ்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பார்வையாளர்கள் மத்தியில் வீழ்ந்ததில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலை உருவாக்கியவர்களின் கனவை விட தற்போது அந்த நாடு இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் வல்லமையுடன் திகழ்கிறது என்று எமது மத்திய கிழக்கு செய்தியாளர் கூறுகிறார்.

ஆனால் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை ஒரு பேரழிவாகவே பார்க்கின்றனர்.

ஜியோனிசம் என்ற ஒரு இளம் தத்துவத்தின் அடிப்படையில், ஜூதர்களுகான தாய் நாடாக, 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே இந்த நாடு உருவானது.

இஸ்ரேலிய மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரிதும் மதத்தைப் பின்பற்றுபவர்கள்தான். ஆனால் ஆங்காங்கு மதசார்பற்றவர்களையும் காணக்கூடியதாக் இருக்கிறது.

அந்த நாடு உருவான கடந்த 60 வருடங்களில் பெரும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது.

No comments: