மலேசியாவிலுள்ள மதவிவகாரங்கள் தொடர்பான ஒரு நீதிமன்றம் இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவரை மீண்டும் தனது முந்தைய மதமான புத்த மதத்துக்கு மாறுவதறாகான அனுமதியை அசாதாரணமாக வழங்கியுள்ளது.
பினாங்கிலுள்ள நீதிமன்றமானது சித்தி பாத்திமா அப்துல்லா என்ற அந்த பெண்மணி இஸ்லாத்தின் கோட்பாடுகளை எப்போதுமே கடைபிடிக்காததால் அவரை இஸ்லாமியராக கருதமுடியாத நிலையில், அவரை முஸ்லிம் அல்ல என்று தீர்பளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இரானிய ஆடவர் ஒருவரை மணந்து கொள்வதர்காக அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக அந்த அம்மையார் தெரிவித்துள்ளார். ஆனால் திருமணமான இரண்டு மாதங்களிலேயே அந்த இரானியர் இந்த அம்மையாரை கைவிட்டு சென்றுவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment