Thursday, May 1, 2008

சயனைட் உட்கொண்டமையினாலேயே சந்தேகநபர்

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலை தொடர்பில்
இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில்
வைக்கப்பட்டிருந்த பெண் சயனைட் உட்கொண்டமையினாலேயே
உயிரிழந்துள்ளார் என்று பிரேத பரிசோத னைகளின் போது தெரியவந்துள்ளது.

அமைச்சர் படுகொலை தொடர்பில் இரக சிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ராஜி என்ற பெண் இரகசிய பொலிஸ் நிலையத்தின் ஆறாம் மாடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

தடுப்புக் காவலில் இருக்கும் போது கடந்த 27 ஆம் திகதி இரவு சுகவீனமுற்ற
நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் மறுதினம் அதிகாலை வைத்திய சாலையில் உயிரிழந்தார்.

இவர் சயனைட் அருந்தியமையினாலேயே மரணித்துள்ளார் என்று பிரேத
பரிசோதனைகளின் போது தெரியவந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என். கே.இலங்ககோன் தெரிவித்தார்.

No comments: