
மேலும் புதிய படங்கள்ஆபாச உடை அணிந்து தசாவதாரம் பட விழாவுக்கு வந்திருந்ததாக மல்லிகா ஷெராவத் மீது கூறப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மல்லிகா ஷெராவத் கவர்ச்சிகரமான உடை அணி வந்திருந்தார். இது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், தமிழ் கலாசாச்சரத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கனிராஜன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை பரிசீலித்த பெரியமேடு போலீஸார் தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக இந்தப் புகார் குறித்து பெரியமேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்குமார், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தார். அப்போது, மல்லிகா ஷெராவத்துக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது.
ஒருவர் அணிந்து வரும் உடை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில், யாரும் தலையிட முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்படித்தான் சிவாஜி பட விழாவில் நடிகை ஷ்ரியா படு கவர்ச்சியாக (மல்லிகா தேவலாம், ஷ்ரியா உடையுடன் ஒப்பிடும்போது) உடை அணிந்து வந்திருந்தார். அதுவும் சர்ச்சையானது. பின்னர் ஷ்ரியா மன்னிப்பு கேட்டதால் பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment