Monday, May 5, 2008

துவிச்சக்கர வண்டியில் வந்த பயங்கரவாதிகள் இன்று விமானத்தில் வருகிறார்கள்

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. இந்தநிலையில் அந்த இயக்கம் அதன் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் நடவடிக்கைகளை தரைமூலமும் கடல்மார்க்கங்களிலும் மேற்கொண்டு விட்ட நிலையில் கடந்த காலங்களில் அதன் தாக்குதல்களை வான் பரப்பிலும் மேற்கொள்ள ஆரம்பித்தது. இதற்காக வான்புலிகள் எனப்படும் விமானப் படையணியையும் புலிகள் இயக்கம் உருவாக்கியது. இதைத் தொடர்ந்து சிறியரக விமானிகள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் சார்ந்த விமானப்படைமுகாம் , யாழ்ப்பாணம் ,மயிலிட்டி கடற்படை முகாம், கொலன்னாவ பெற்றோலிய களஞ்சிய நிலையம், முத்துராஜவெல எரிவாயு களஞ்சிய நிலையம் , அனுராதபுரம் விமானப்படை முகாம், வெலிஓய இராணுவ பாதுகாப்பு நிலையம் ஆகிய படையினர் தரப்பு முகாம்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்கள் மீது விமானத் தாக்குதல்களை புலிகள் இயக்கத்தின் வான் புலிகள் அணியினர் நடத்தியுள்ளனர்.
இவ்வாறு புலிகள் இயக்கம் தோன்றிய சுமார் 30 ஆண்டுகாலப்பகுதியில் ஆகாயம் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்களை நடக்கக்கூடியதொரு அதிபயங்கரவாத இயக்கமாக உருவெடுத்துள்ளது.

புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இயக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களில் துவிச்சக்கர வண்டியில் சென்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவிக்க ஆரம்பித்து இன்று விமானங்கள் மூலம் இயக்கத்தின் பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டார். இன்று அவருடைய வான்புலிகள் எனப்படும் ஆகாய மூலப் பயங்கரவாதிகள் விமானத் தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு பிரபாகரன் தனது இயக்கத்தின் பயங்கரவாதத் தாக்குதல் முறைகளை மாற்றி விட்டார்.

இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் விடுதலை அமைப்புகளும் இயங்கி வருகின்றன. ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக தனியான விமானப் படையணி அணியை உருவாக்கி இவ்வாறு விமானத் தாக்குதல்களை நடத்திவரும் ஒரே ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு புலிகள் இயக்கம் ஒன்றேயாகும்.

உலகில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளில் முன்னணியில் உள்ளதும் முதற்தரமானதுமாகக் கருதப்படும் தலிபான் அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனிடம் கூட தாக்குதல் விமானமோ அல்லது விமானப்படையணியோ கிடையாது. பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகளுக்கேற்ப புலிகள் அமைப்பு தற்போது சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரே இவ்வாறு விமானப்படையணியை உருவாக்கி விமானப்படைப்பலத்தைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தவகையில் புலிகள் இயக்கம் விமானப்படையணியை உருவாக்கியுள்ளதை நிரூபிக்கும் முதல் நிகழ்வு 1998 இல் நிகழ்ந்தது.1998 நவம்பர் 27 ஆம் திகதி புலிகள் இயக்கம் அதன் மாவீரர்கள் தினத்தைக் கொண்டாடிய பொழுதே முதன் முதலாக புலிகளின் விமானம் பகிரங்கமாக வானில் பறக்கவிடப்பட்டது.

முல்லைத்தீவு முள்ளியவளையில் நிகழ்ந்த மாவீரர் நினைவு தின நிகழ்வின்போது இயக்கத் தலைவர் பிரபாகரன் அதில் கலந்துகொண்டு சுடரேற்றிய வேளையில் புலிகள் இயக்கத்தின் விமானம் முதன் முதலாக வானில் பறந்து மலர்களைத் தூவியது. இதைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தின் வானொலியாகிய புலிகளின் குரல் வானொலியும் தமிழ்நெற் தமிழ் இணையத்தளமும் முதன் முதலாக புலிகளிடம் உள்ள விமானம் பற்றியும் விமானப்படை பற்றியும் வெளி உலகத்துக்கு அறிவித்துப் பிரசாரம் செய்தன. தொடர்ந்து சுமார் 9 வருடங்களின் பின்னர் புலிகள் இயக்கத்தின் வான் புலிகள் படையணியினர் அதன் முதலாவது விமானத் தாக்குதலை 2007 மார்ச் 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய விமானப்படை முகாம் மீது மேற்கொண்டது.

உலகில் பயங்கரவாத அமைப்பு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது விமானத் தாக்குதலாக அது அமைந்தது.

லங்காதீப: 04.05.2008

Thinakkural [05 - May - 2008]

No comments: