Monday, May 12, 2008

கைதிகள் மீது கடும் தாக்குதல்

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 68 பேர் அங்கிருந்து இரவோடு இரவாக பூசா தடுப்பு முகாமுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் திடீரென தமிழ் அரசியல் கைதிகளை பஸ்களில் ஏற்றிய சிறைக்காவலர்கள் அவர்களை பொலிஸாரின் ன் காவலுடன் பூசாவுக்கு தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் புதிய மகசீன் சிறைச்சாறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளே இவ்வாறு இடம்மாற்றப்பட்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் பூசா தடுப்பு முகாமுகக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்களில் பலர் நிர்வாணம் ஆக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு தனியாகவே கைதிகள் பூசா தடுப்பு முகாமுக்கு அழைத்துச்செல்லப்ப்டடுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் பூசா தடுப்பு முகாமுக்கு திடீரென மாற்றப்பட்டமை குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா நீதியமைச்சர் டிலான் பெரேரா, பிரதி நீதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி ஆகியோருடன் நேற்று தொடர்பு கொண்டு நிலைமையினை விளக்கிக்கூறியுள்ளார்.

இதனையடுத்து பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி சிறைச்சாலை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் பூசாமுகாமுக்கு திடீரென மாற்றப்பட்டமை குறித்து விசனம் தெரிவித்ததுடன் அவர்களை மீளவும் புதிய மகசீன் சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளார்.

புதிய மகசீன் சிறைச்சாலை சூழலில் 10ஆம் திகதி குண்டு வெடிக்கும் சூழல் காணப்பட்டதாகவும் இதனாலேயே தமிழ் அரசியல் கைதிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் வஜிர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்..

இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிககை எடுப்பதாக நீதியமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தவுடன் உறுதியளித்துள்ளார்.

No comments: