Monday, May 12, 2008

இன்னுமொரு இயற்கை அழிவு

சீனாவை உலுக்கிய பாரிய பூமியதிர்ச்சி 8,500பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம்

தென்மேற்கு சீனாவிலுள்ள சிசுவான் மாகாணத்தை இன்று திங்கட்கிழமை தாக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி காரணமாக சிறுவர்கள் உட்பட 5,000 பேர் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி பூமியதிர்ச்சி காரணமாக இரு பாடசாலைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தமை காரணமாக அங்கிருந்த சுமார் 900 சிறுவர்கள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இப்பூமியதிர்ச்சியையடுத்து சீனாவின் அதியுயர்ந்த கட்டிடமான ஜின்மாவோ கோபுரத்திலிருந்தும் ஏனைய உயர்ந்த கட்டிடங்களிலிருந்தும் மக்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.

சீனாவில் இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி, தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக், வியட்நாமின் ஹனொய் நகர் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.

சிசுவான் மாகாண தலைநகரான செங்துவிலிருந்து 57 கிலோமீற்றர் தொலைவில் நேற்று அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2.28 மணிக்கு தாக்கிய பூமியதிர்ச்சியால் செங்து நகரிலோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள திறீ ஜோர்ஜெஸ் அணையிலோ பிரதான சேதமெதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறி க்கையிட்டுள்ளது.

எனினும் மேற்படி நகரக் கட்டிடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்துவிலிருந்து 930 மைல்கள் தொலைவிலுள்ள சீனத் தலைநகர் பீஜிங்கிலுள்ள பல கட்டிடங்கள், இப்பூமியதிர்ச்சியின் போது சுமார் இரு நிமிடங்களுக்கு நடுக்கம் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேன்மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: