Monday, May 26, 2008

மகளையே தாரமாக்கிய இன்னொரு கொடூரன்

பெற்ற மகளையே தாராமாக்கி, குடும்பம் நடத்தி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிய, அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 73 வயது கொடூரனுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவை சேர்ந்த ஜோசப் பிரட்சில் என்ற 73 வயது காமக்கொடூரன், தான் பெற்ற மகளையே, நிலவறையில், 24 ஆண்டாக தொடர்ந்து கற்பழித்து, மூன்று குழந்தைக்கு தாயாக்கிய விஷயம் வெளியான போது, உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இவனைப்போலவே, பெற்ற மகளை இரண்டு குழந்தைக்கு தாயாக்கிய இன்னொரு காமக்கொடூரனுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை சேர்ந்தவன் எலிடிரியோ சொரியா என்ற காமக்கொடூரன், தனது செந்த மகளையே தாராமாக்கி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கி உள்ளான். இவனுக்கும் வயது 73. ஜோசப்புக்கும், எலிடிரியோவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளது. இவனும் தனது மகளுக்கு 12 வயதாகும் போது, 1992ம் ஆண்டு, காமவசப்பட்டான். தனது மகளை மிரட்டி, உறவு கொண்டான். இந்த விஷயம் தெரியவந்ததை அடுத்து, அவர்களை விட்டு, ஐந்து குழந்தைகளுடன் எலிடிரியோவின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இது எலிடிரியோவுக்கு வசதியாக போய் விட்டது. எந்த சங்கோஜமும் இல்லாமல், சொந்த மகளுடன், "குடும்பம்' நடத்தி வந்தான். 13 வயதில் எலிடிரியோவின் மகள் கர்ப்பமடைந்தாள். 1997ம் ஆண்டு, இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

ஜோசப்பை போல, மகளை அடைத்து வைத்து"அனுபவிக்கவில்லை' எலிடிரியோ. ஆனால், மகள் மூலம் பிறந்த குழந்தையை வைத்து மிரட்டியே, தனது இச்சையை தீர்த்து வந்தான். இந்த தகாத உறவில் வெறுப்படைந்து, பல முறை வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் மகள். ஆனால், மகள் மூலம் பெற்ற குழந்தைகளை துப்பாக்கி முனையில் வைத்து, மிரட்டி, வீடு திரும்ப வைத்துள்ளான் எலிடிரியோ. 11 ஆண்டுகளாக இது தொடர்ந்து வந்தது. இதில் வெறுப்படைந்த மகள், போலீசாரிடம் புகார் செய்தார். இதன் பிறகு தான், மற்றவர்களுக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. எலிடிரியோவை போலீசார் கைது செய்து, வழக்கு தொடர்ந்தனர். அவனுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: