பேய் பிடித்துள்ளதாக எண்ணி தாயை இரும்பு கம்பிகளால்
அடித்து கொன்று, உறவினர் பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற 3 மகன்களை
போலீசார் கைது செய்தனர்.டெல்லி காஜியாபாத் பகுதியை சேர்ந்த 55 வயது பெண்ணின் மகன்கள் ரோகித்,
ஆசிஷ், நவநீத். இதில் ரோகித் எம்.பி.ஏ. முடித்துள்ளார். பொறியியல் கல்லூரியில்
ஆஷிசும், 12ம் வகுப்பில் நவநீத்தும் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக
இவர்களது தாய் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார்.
இதையடுத்து, அவரை ஒரு மந்திரவாதியிடம் கூட்டிச் சென்றனர். தாய்க்கு பேய்
பிடித்துள்ளது என்றும், அவரை கட்டிப்போட்டு, ஒரு பெண்ணை பலி கொடுத்தால் அவர் சரியாகிவிடுவார் என்று அவர்களிடம் மந்திரவாதி கூறியுள்ளார். இதை நம்பிய மூன்று பேரும், தாயை கட்டிப்போட முயற்சித்தனர்.
ஆனால், அவர் மறுக்கவே அவரை இரும்பு கம்பியால் மூன்று பேரும் தாக்கினர். வலி தாங்காமல் தாய் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மகன்கள், அவரை தொட்டு பார்த்தனர். தாய் இறந்து விட்டது தெரிந்தது.
நரபலி கொடுத்தால் தாய் மீண்டும் பிழைத்து வருவார் என்று எண்ணி பக்கத்து வீட்டில் இருந்த தங்களது உறவினர் பெண்ணை அடித்து இழுத்து வந்தனர். மூன்று பேரையும் அந்த பெண்ணின் கணவர் தடுத்தார். "எங்கள் தாய் மீண்டும் பிழைக்க இவரை பலி கொடுத்தாக வேண்டும்" என்று
ஆவேசமாகக் கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர், இது பற்றி போலீக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து 3 மகன்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லி காஜியாபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thursday, May 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment