Thursday, May 1, 2008

பிரியங்கா கை முறிந்தது


சாய்மீரா நிறுவனம் தயாரிக்கும் படம். ‘வானம் பாத்த பூமியிலே’. இதில் அசோக் ஜோடியாக ‘வெயில்’ பிரியங்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடி அருகே நடந்து வருகிறது. அசோக்கும் பிரியங்காவும் சண்டை போடுவது போலவும் பிறகு அசோக், பிரியங்காவை தள்ளிவிடுவது போலவுமான காட்சி நேற்றுமுன்தினம் படமாக்கப்பட்டது. சூப்பர் சுப்பராயனின் உதவியாளர் இக்காட்சியை அமைத்துக்கொண்டிருந்தார். காட்சி யதார்த்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக பிரியங்காவை வேகமாக தள்ளினார் அசோக்.

அப்போது கீழே விழுந்த பிரியங்காவுக்கு இடது கை முட்டி முறிந்தது. வலியால் துடித்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

No comments: