கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
முதலில் காரொன்றில் மோதுண்ட இந்தப் பெண்ணை அந்தக் காரின் பின்னால் வந்த பஸ் நசித்துச் சென்றதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்றுக் காலை 9 மணியளவில் வெள்ளவத்தை டெல்மன் ஆஸ்பத்திரி முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலி வீதியில் கடற்கரைப் பக்கமாக இருந்து எதிர்ப்புறம் செல்வதற்கு இந்தப் பெண் முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்றினால் மோதுண்டு நடு வீதியில் தூக்கி வீசப்பட்டார்.
இவ்வேளையில் காரின் பின்னால் மிக வேகமாக வந்துகொண்டிருந்த பயணிகள் பஸ் இவர் மீது ஏறிச் சென்றுள்ளது.
இதனால் தலை முழுமையாக நசுங்குண்டு சிதைந்த நிலையில் அந்தப் பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது சடலம் பின்னர் களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment