Saturday, May 10, 2008

கனடாவில் உலகத்தமிழர் இயக்க அலுவலகம் முற்றுகை

கனடாவில் 2006ம் ஆண்டு புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையடுத்து ரொரன்ரோ மற்றும் மொன்றியல்pல் உள்ள உலகத்தமிழர் இயக்க அலுவலகங்கள் ஆர்;.சி.எம்.பி அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது அங்கிருந்து பல ஆவணங்கள் பொலிசாரால் எடுத்துச்செல்லப்பட்டு; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கடந்த வாரம் ஆர்;.சி.எம்.பி அதிகாரி கோப்ரல் ஷேர்லி டேவர்மன் அவர்களால் பெடரல் நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி மூலம் ஆதாரங்களுடனும் சாட்சியங்களுடனும் சமர்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை வைத்து மொன்றியலில் இயங்கி வந்த உலகத்தமிழர் இயக்க அலுவலகத்தை ஆர்;.சி.எம்.பி அதிகாரிகள் முற்றுகையிட்டு அதன் சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர். உலகத்தமிழர் இயக்கம் புலிகளின் வெளிநாட்டுக்கிளை என்பதையும்; நிரூபித்துள்ளனர்

2006ம்ஆண்டு பொலிசார் மொன்றியல் அலுவலகத்தை முற்றுகையிட்டதை அறிந்த ரொரன்ரோ உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் இரவோடு இரவாக இரண்டு வான்களில் முக்கிய ஆவணங்களை ஏற்றிக்கொண்டு ஓரு வாகனத்தை வெலஸ்லி அன்ட் பார்லிமென்ட் சந்திப்பில் உள்ள தமிழர் வர்த்தக நிலையமான அம்பாள் ஸ்ரோர் இலும் மற்ற வாகனத்தை தமிழர் தொழில்நுட்ப கல்லூரியிலும் கொண்டு சென்று பதுக்க முற்பட்டபோது ஓரே நேரத்தில் பொலிசாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள். மொன்றியல் அலுவலகம் பொலிசாரினால் முற்றுகையிடும்போதே ரொரன்ரோவில் உள்ள உலகத்தமிழர் இயக்க அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள தொழிற்சாலை ஒன்றினுள் இருந்து உலகத்தமிழர் இயக்க அலுவலகத்தை பொலிசார் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரொரன்ரோவில் உள்ள உலகத்தமிழர் இயக்கத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் மொழிபெயர்ப்பு நீதிமன்றத்தில் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரொரன்ரோவில் உள்ள உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழர்களிடமும் தமிழ் வர்த்தகர்களிடமும் வற்புறுத்தி பணம் வசூலித்தது தமிழ் ஊடகங்களை தடைசெய்தது தாக்கப்பட்டது சுடப்பட்டது போன்ற வன்முறையில் ஈடுபட்டதை மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பும் கனேடிய ஊடகங்களும் சுட்டிக்காட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்களால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் பொலிசாரிடம் முறையிட்டும் உள்ளனர்; உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் கனேடியத்தமிழர்களின்மீது மேற்கொண்ட வன்முறைகள்தான் கனடாவில் புலிகள் இயக்க தடைக்கு முக்கிய காரணமாகும்.; இலங்கையில் வாழமுடியாமல் அமைதியைத் தேடிவந்த தமிழர்கள் அனைத்து கனேடிய மக்களும் அனுபவிக்கின்ற சுதந்திரத்தை கனடாநாட்டில் அனுபவிக்கவிடாமல் விடுதலை என்ற பெயரில் இந்தகுழுவினர் கனேடியச்சட்டங்களை மதிக்காமல் தமது இரும்புப்பிடிக்குள் தமிழ்மக்களை வைத்திருப்பதை ஜனநாயகத்தை மதிக்கும் இந்தநாட்டில் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்?

கனடாவில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட பின்னரும் உலகத்தமிழர் இயக்கம் சுதந்திரமாக இயங்கி வந்தது ரொரன்ரோ உலகத்தமிழர் இயக்க தலைவர் சிற்றம்பலம் ;கூட அண்மையில் உலகத்தமிழர் இயக்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று அடித்துக்கூறினார். ஆனால் ஆர்.சி.எம்.பி அதிகாரிகளோ உலகத்தமிழர் இயக்கம் புலிகளின் வெளிநாட்டுக்கிளைதான் என ஆதாரத்துடன் கூறியுள்ளனர். ரொரன்ரோ ஸ்ரார் நேற்றைய(09-06-08) ஆசிரியர் தலையங்கத்தில் உலகத்தமிழர் இயக்க தலைவர் சிற்றம்பலம் இப்போது ஏன் வாயைத்திறக்கவில்லை? கனேடியன் தமிழ் காங்கிரஸ் ஏன் இதுபற்றி கருத்துச் சொல்லவில்லை? எனக்கேட்டு எழுதியிருக்கிறார்கள். ஏன் என்றால் எதற்கு எடுத்தாலும் பத்திரிகைகளுக்கு கருத்துக்கூறுகின்ற இந்த அமைப்புகள் இப்போது முழுப்ப+சணிக்காயை சோற்றில் மறைக்கமுடியாத நிலையில் உள்ளனர். உலகத்தமிழர் இயக்க அலுவலக முற்றுகைபற்றி அனைத்து கனேடிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. நசனல் போஸ்ட் பத்திரிகை (05-மே-2008) இதழில் வெளிவந்த செய்தியின் மொழிபெயர்ப்பை வாசிக்கலாம்

தமிழ் பயங்கரவாத குழுவின் செயற்பாட்டு குறிப்பேடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது

அரசியல்வாதிகளை உள்வாங்கு, புலிகளின் குறிப்பேட்டில் கட்டளை
கிரேமி கமில்டன் ரூ ஸ்டுவர்ட் பெல்
நஷனல் போஸ்ட், வைகாசித் திங்கள் 05, 2008
(ஆர்.சி.எம்.பியின் சத்தியக்கடதாசியில் ஆதாரமாக இணைக்கப்பட்ட படத்தில் உலகத்தமிழர் இயக்கத்தின் நிர்வாகி முரலீகரன் துரைரட்னமும் இடது பக்கத்தில் தமிழ் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் காணலாம் )

மொன்றியல்: ஓரு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் சுமார் 600 போர் கூடியிருந்து, தமிழ்ப்புலிகளின் கொடியேற்றப்பட்டபின் ஒலிநாடாவில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பேச்சை கேட்டனர். பின்னர் இரகசிய பொலிசார் பார்த்துக்கொண்டிருக்க ஒரு “வெள்ளை” இனத்தைச்சேர்ந்த ஆண் ஒருவர் மேடையை நோக்கி சென்றார்.“இந்த நபர் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மக்ஸிம் பேர்னியரை பாராட்டி, அரசாங்கத்தின் நிலைப்பாடாகிய வன்முறையற்ற பேச்சுவார்ததை மூலமாக பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என பேசினார்” என றோயல் கனேடியன் மவுன்டட் பொலிசாரினால் (RCMP) சமஷ்டி நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டிருந்தது.

கடந்த மார்கழி மாதம் 1ம் திகதி மொன்றியல் உலகத்தமிழர் இயக்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மாவீரர்நாள் கொண்டாட்டம் முடிவடைந்த பின் இப்பேச்சாளர் தனது பென்ஸ் வாகனத்தை ஓட்டிச்செல்லும் போது ஒரு கண்காணிப்;பு அதிகாரி ஒருவர் அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை குறித்து யாருடையது என்று பார்த்தால் அது மொன்றியல் தெற்கிலுள்ள பிராஸார்ட் லா பிராhரி என்ற இடத்திலுள்ள கன்சர்வேர்ட்டி கட்சியின் வேட்பாளர் மொரிஸ் பிரஸார்ட் என்பவருக்குரியது என தெரிந்து கொண்டார்.

பாடசாலை கேட்போர்; கூடத்தில் நடந்த சம்பவம், பேச்சு எல்லாம் புலிகள் எப்படி தங்கள் சூழ்ச்சிகளால் கனேடிய அரசியல்வாதிகளையும், சொந்த பந்தங்களைப்பார்க்க இலங்கைக்குச்செல்லும் தமிழ் குடும்பங்களையும்; தங்கள் சுதந்திரத்திற்கான போரை முன்னெடுக்க பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் வெளியான, 2006ல் கைப்பற்றப்பட்ட புலிகளின் குறிப்பேட்டின்படி வெளிநாட்டு அரசியல்வாதிகள்தான் இவர்களின் பிரச்சாரத்திற்கு முக்கியஸ்தர்களாக திகழ்கின்றனர்.

“புலிகளின் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளதிற்கேற்ப புலிகளின் வெளிநாட்டுக்கிளைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றவர்களோடு தொடர்பு வைத்து புலிகளின் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற கட்டளையை ஏற்று உலகத்தமிழர் இயக்கம் செயற்பட்டுவந்தது” என ஆர்;.சி.எம்.பி கோப்ரல் ஷேர்லி டேவர்மன் தனது சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளார். பொலீசார் புலிகளின் செயற்பாட்டு குறிப்பேட்டை 2006ல் உலகத்தமிழர் இயக்க காரியாலத்தை முற்றுகையிடும் போது கண்டுபிடித்தனர்.
சித்திரை 1 என்று திகதியிடப்பட்ட சத்தியக்கடதாசியில் ஏற்கனவே பெடரல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தபடி மொன்றியல் உலகத்தமிழர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் முடக்குவதற்கு ஆதரவாக எழுதப்பட்டிருந்தது. (கனேடிய அரசாங்கம் தமிழ்ப் புலிகளை பயங்கரவாத பட்டியலில் 2006ல் இணைத்துக்கொண்டது.) சத்தியக்கடதாசியில் உலகத்தமிழர் இயக்கத்தை புலிகளின் ஒரு “வெளிநாட்டுக்கிளை” என குறிப்பிடப்படுகிறது.

மொன்றியலில் நடந்த புலிகளின் வருடாந்த மாவீரர் தின கொண்டாட்டத்தில் பல போலி கல்லறைகள் அமைக்கப்பட்டு அவை இறந்த புலிகளின் கல்லறைகளாக கருதப்பட்டு போர் வீரரர்கள் என்றகொடியும் கட்டப்படடிருந்தது.

கடந்த மார்கழியில் நடந்த கொண்டாட்ட படங்களில் சிறு பிள்ளைகள் புலிகளின் டி-சேர்ட்கள் அணிந்து காணப்பட்டனர். அதிலும் ஒரு சிறுவன் இராணுவ சீருடை அணிந்து போலி ஆயுதம் ஒன்றை சுழ்ற்றிக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

திரு. பிராஸார்ட் நேற்றைய பேட்டியில் தன்னை அவ்விழாவில் கலந்து கொண்டு தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகான ஆதரவு தரச்சொல்லி கேட்டார்கள் என்றும்; புலிகளை ஆதரிக்க அங்கு சென்றதாக தான் கருதவில்லை என்றும் கூறினாh.; அத்துடன் அங்கு காட்சியளித்த கொடி கொரில்லாக்களினுடையது என தன்னால் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை என்றும் கூறினார்.
“எனக்கு எல்லா சின்னங்களும் தெரியாது” என்றும் “ சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வன்முறையை நிறுத்தும் எண்ணத்துடனேயே நான் அங்கு சென்றேன். நான் தமிழ் புலிகளுடன் சம்பந்தமுடையவராக இருக்கவிரும்பவில்லை. எனக்கு பயங்கரவாதிகளுடன் இணக்கப்பாடில்லை” எனக்கூறினார்.
“2004ல் நடந்த மாவீரார் கொண்டாட்டத்தில் மொன்றியல் Borough of Cote-des-Neiges-NDG மேயர் மைக்கல் அப்பில்பாம் வருகை தந்திருந்தார். தழிழ்ப்புலிகளின் கொடிகள் அங்கு காட்சியளித்தன. அத்துடன் அங்கு தற்கொலை அணியான கரும்புலிகளின் சின்னத்தடனும் கொடிகள் காணப்பட்டன.”
ஆர்.சி.எம்.பி அதிகாரிகள் திரு. அப்பிள்பாமின் காரியாலத்திற்கு சென்ற மாசி மாதம் விஐயம் செய்து அது பற்றி விசாரித்தனர். அப்பிள்பாம் தான் உலகத்தமிழர் ஒழுங்குசெய்த பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாக தெரிவித்தது மட்டுமல்லாமல் அவர்கள் மேலும் அவருக்கு விட்ட அழைப்பிதழ்களையும், நகராட்சி பண உதவி செய்யவேண்டும் என்று கேட்ட ஆவணங்களையும் புலன் விசாரனை அதிகாரிகளிடம் கையளித்தார்.

கண்டெடுக்கப்பட்ட புலிகளின் ஆவணங்களின்படி தமிழ் கனேடிய பிள்ளைகளை இக்கொண்டாட்டங்களில் ஈடுபடுத்துவது புலிகளின் வெளிநாட்டுக்கிளைகளின இன்னொரு முனை திட்டமாக கருதலாம். இன்னொரு கணக்கு 2004ல் கனேடியன் தமிழர்கள் சிலர் இலங்கையில் பயிற்சி பட்டறைகளில் கலந்துகொண்டதையும,; அந்த பட்டறையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசியதையும் வெளிப்படுத்தியுள்ளது. “அவர்(பிரபாகரன்) எல்லேரும் வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்றும் வெளிநாட்டிலுள்ள இளம் சந்ததியினர் சுதந்திரத்திற்கான போரில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்” என சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த இயக்கத்தினர் பரந்து செயற்படடுவருவதால் மொன்றியலில் வாழும் தமிழர்கள் பயத்துடன் வாழுகின்றனர். உலகத்தமிழர் இயக்கம் தமிழர் மத்தியில் எங்கும் வியாபித்துள்ளது” என தகவல் கொடுத்தவர்களில் ஒருவர் குறிப்பிட்டார். “சாதாரண தமிழர்கள் உலகத்தமிழர் இயக்கத்தினரால் சதா புலிகளைப்பற்றி ஞாபகப்படுத்தப்டுகிறார்கள்” என்றார். தகவல் தந்த முவரும் நீதிமன்றத்தில் ஆஐராகி சாட்சி சொல்ல பயப்படுகிறார்கள்.

ஆர்.சி.எம்.பி வேறு ஐந்து தமிழர்களை விசாரித்தது ஆனால் அவர்களின் விபரங்கள் சத்தியக்கடதாசியில் இருந்து பாதுகாப்புக்காக மறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஐவரும் மாதாந்தம் புலிகளுக்கு பணம் செலுத்த வற்புறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திற்குள் போகமுன் இப்பணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். வங்கியிலிருந்து மாதாந்தம் பணம் கழிப்பதற்கான அதிகார பத்திரத்தை உலகத்தமிழர் இயக்கத்தை சேர்ந்த தனசேகரம் சந்திரசேகரம் என்பவர் கனடாவிற்கு திருப்பி கொண்டுவந்துள்ளார். இவர் புலிகளுக்கு பணம் சேர்ப்பவர்களில் ஒருவர் என ஆர்;.சி.எம்.பி கூறுகிறது.

பொலிசாரின் சத்தியக்கடதாசியில் உலகத்தமிழர் இயக்கம் தமிழ் கனேடிய சமுதாயத்தை எவ்வாறு அடக்கி பணம் வசூலித்து இலங்கையில் நடக்கும் கொடூர போரிற்கு பணம் அனுப்பி தீவீரப்டுத்துகிறது என நம்புகிறார்கள் என்பதை விளக்கி கூறுகிறது.மொன்றியல் உலகத்தமிழர் இயக்கம் புலிகளுக்கு பணம் சேர்ப்பதை பல முறை மறுத்து வந்த போதும் கியுபெக் உலகத்தமிழர் இயக்க குழு கொரில்லாக்களின் வேண்டுகோளிற்கிணங்க வெளிப்படையாக பணம் சேர்த்து வந்துள்ளனர் எனக் கூறுகிறது.

கனடாவில் பணம் சேர்க்கும் செயற்பாடு இலங்கையிலுள்ள புலிகளின் சர்வதேச செயலகத்தினால் கஸ்ரோ என அழைக்கப்படும் வி. மணிவண்ணனால் நிர்வகிக்கப்பட்டு வரப்படுகிறது என பொலிஸார் கூறுகின்றனர்.பொலீசாரினால் கைப்பற்றப்பட்ட புலிகளின் நிர்வாக குறிப்பேட்டில் மணிவண்ணன் வெளிநாட்டுக்கிளைகளை வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து மாதாந்த சந்தா வசூலிக்க சகல மட்டநடவடிக்கைகளையும் எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.அதில் பணம் எப்படி வசூலிப்பது என்று அவர் விளக்கம் கூறுகையில், இசை, நாடகம், விளையாட்டு விழாக்களில் அனுமதிகட்டணம் பெறுவது மற்றும் தமிழ் புலிகளின் “விடுதலைப்போராட்டம்” பற்றிய வெளியீடுகள் விற்று எப்படி பணம் பெறுவது என விபரமாக கூறப்பட்டுள்ளது.

புலிகள் சர்வதேச பணம் சேகரிப்பு விடயத்தில் முழுதும் அறிந்து வைத்திருப்பதுடன் மிகவும் அவதானமாகவும் இருக்கிறார்கள். வெளிநாட்டுக்கிளைகள் மாதாந்த வரவு செலவு கணக்கு விபரம் ஒவ்வொரு மாதமும் 10ம் திகதிக்கு முன் புலிகளின் சர்வதேச செயலகத்திற்கு கிடைக்கும்படி செய்யவேண்டும். இக்கணக்குகள் கொண்ட 64 பக்கங்கள் உடைய புத்தகக்கட்டொன்றையும் ஆர்;.சி.எம்.பி அதிகாரிகள் முற்றுகையின்போது கண்டெடுத்தனர்.மிகவும் இலகுவான பணம் வசூலிப்பு முறை மாதாந்தம் வங்கிகளிலிருந்து நேரடியாக பணம் எடுப்பதற்கான அதிகாரம் பெறுவதேயாகும். உலகத்தமிழர் இயக்கமானது கனேடிய தமிழர்களின் வங்கிகளிலிருந்து நேரடியாகவே மாதாந்தம் பணம் பெறுவதற்கான அனுமதிப்பத்திரங்களில் கையெழுத்து பெறுவதையே உற்சாகப்படுத்துகின்றனர் என பொலீஸார் கூறுகின்றனர். மொன்றியலிலுள்ள உலகத்தமிழர் இயக்கம் 2003லிருந்து 300,000 டொலர்களுக்கு அதிகமாக சேர்த்துள்ளனர் என ஆர்;.சி.எம்.பி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

உலகத்தமிழர் இயக்மானது தமிழ்ப்புலிகளுடன் இரகசியமான வங்கி ஏற்பாடுகளில நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றாhகள் என பொலீஸார் குற்றம் சுமத்துகிறார்கள். உலகத்தமிழர் இயக்கமானது கனேடிய தமிழர்களின் விபரங்கள், யார்யார் புலிகளுக்கு பணம் செலுத்தியுள்ளனர் என்ற விபரம் உட்பட எல்லாவற்றையும் புலிகளுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

கனேடிய தமிழர்கள் இலங்கைக்கு செல்லும் போது அவர்கள் புலிகளுக்கு கனடாவில் பணம் செலுத்தியுள்ளார்களா? என்று கண்டுபிடித்து அப்படி செலுத்தாதவர்களிடம் வங்கிகளில் மாதாந்த பணம் பெறுவதற்கான அதிகார பத்திரத்தில் அங்குவைத்தே கையொப்பம் வாங்கிக்கொண்டு பின் அப்பத்திரங்களை மொன்றியலுக்கு திருப்பி அனுப்பிவைக்கிறார்கள.

“கருணானந்தசுவாமி என்பவரே இப்படி கனடாவிலிருந்து இலங்கை சென்றுவிட்டு திரும்பி வரும் கனேடிய தமிழர்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்கு பொறுப்பாக இருந்தவர். அவரிடமிருந்த வசூல் பட்டியலில் சுமார் 150 பெயர்கள் இருந்தன. இவர் ஓழுங்காக இந்த பத்திரங்களை இலங்கையிலுள்ள புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார் அத்துடன் இவருக்கே வசூலிப்பிற்கான அதிகாரம்” என அவ்வாணைப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தது. (மணிவண்னன் கருணானந்தசுவாமி ஒரு உலகத்தமிழர் நிர்வாகி.)

“கருணானந்தசுவாமியும் சந்திரசேகரமும் மொன்றியலிலுள்ள தமிழர்களிடம் சென்றும் வங்கிகளில் இருந்து மாதாந்;த பணம் பெறுவதற்கான அதிகாரப்பத்திரத்தில் கையொப்பமிட்டவர்களிடமும் புலிகளுக்கு பணம் கொடுக்க தயங்கியவர்களிடமும் இருந்து பணம் வசூலிப்தில் ஈடுபட்டனா.;”ஏனைய பணம் வசூலிப்பு முறைகளாக அவர்கள் பத்திரிகைகள் விற்றும் வங்கிகளில் கடன் வாங்கியும் பணம் சேர்த்தனர். தமிழ் மக்கள் உலகத்தமிழர் இயக்கத்திலிருந்து வருபவர்களுக்கு பயந்தும் கடமைப்பட்டும் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் புலிகளுக்கு பணம் செலுத்தாவிட்டால் தாங்கள் பழி வாங்கப்படுவர் என்று பயந்து வாழ்கின்றனர்” என பொலிஸார் தமது; சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளனர்.உலகத்தமிழர் இயக்கமானது மொன்றியலில் மட்டும், 2001லிருற்து சுமார் 666,874 டொலர்கனைச் சேர்த்துள்ளது என பொலீஸார் மதிப்பிட்டுள்ளனர்.

உலகத்தமிழர் இயக்கமானது சேர்த்த பணத்தையெல்லாம் சர்வதேச செயலகத்திற்கூடாக தமிழ்ப்புலிகளுக்கு அனுப்பியுள்ளதை அவர்களின் நிதி அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. 2005ல் ஆறு மாத காலத்திற்குள் மொன்றியல் குழு 105,000 டொலர்களை புலிகளுக்கு அளுப்பி வைத்துள்ளனர் என பொலிஸாரின் ஆவணங்கள் கூறுகின்றன.

ரொரன்ரோவில் இருந்து ஞானச்சந்திரன் சிவக்குமார் விக்னேஸ் இராஐரட்னம் (10-மே-08)

Thanks....Thenee.com

No comments: