பாராளுமன்றத்தின் பன்மொழி இணையத்தளம் www.parliament.lk 2008 மே 14ஆம் திகதி கௌரவ சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார அவர்களால் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்படும்.
பாராளுமன்றத்தின் சட்டவாக்க, பிரதிநிதித்துவ, மற்றும் மேற்பார்வைத் தொழிற்பாடுகளை வினைத்திறனுடனும் பயனுறுதிமிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்கத்தைக் கொண்ட பாராளுமன்றத்தை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இணையத்தளம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தின் ஆங்கிலப் பிரதி 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
ஹன்சாட், ஒழுங்குப் பத்திரம், ஒழுங்குப் புத்தகம், அனுபந்தம், குழு அறிக்கைகள் போன்ற முக்கியமான ஆவணங்கள் அடங்கலாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய சமகாலத் தகவல்களை இந்த பன்மொழி வெப்தளம் மூன்று மொழிகளிலும் வழங்குகின்றது.
இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமக்குரிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான பிரத்தியேகமான ஓர் இடத்தைக் கொண்டிருப்பர். பொதுமக்கள் பகுதி ஊடாக வெப்தளத்தின் மூலம் பாராளுமன்றத்துடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு வழங்கப்படும். தற்காலப் போக்குகளுக்கு அமைவாக ஆர்.எஸ்.எஸ். சந்தா போன்ற பதிய செயற்பாடும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உறுப்பினர் விபரக் குறிப்பேடானது பொதுமக்கள் தத்தம் உறுப்பினர்களுடன் தொடர்பாடுவதை இலகுவாக்கும் தொடர்பு விபரங்களை அவர்களுக்கு வழங்குகின்றது. சட்டவாக்கச் சபை மற்றும் ஆட்சிமுறை மீதான பொதுமக்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதன் மூலம் பன்மொழி இணையத்தளமானது சனநாயகச் செயன்முறையில் பொதுமக்களின் பங்கேற்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்றத்துக்கான பன்மொழி இணையத்தளத்தை விருத்திசெய்வதற்கு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு உலக வங்கியின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட அதன் ஈ – ஸ்ரீ லங்கா கருத்திட்டத்தின் வாயிலாக அனுசரணை வழங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment