Friday, May 2, 2008

ஆபாச ஆடையுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகை





சென்னை தசாவதார திரைப்பட பாடல் நாடா வெளியீட்டு விழாவில் ஆபாச
ஆடையுடன் கலந்து கொண்டதோடு மட்டுமன்றி முதல்வர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அநாகரிகமான முறையில் இந்தி நடிகையான மல்லிகா ஷெராவத் நடந்து கொண்டதால் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி விட்டதாகக் கூறி இந்து மக்கள் கட்சி நடிகைக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 25ஆம் திகதியன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் தசாவதாரம் பாடல் நாடா வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதி நடிகர்களான ஜாக்கி சான், அமிதாப்பச்சன், மம்மூட்டி உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தி நடிகையான மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார்.

இவர் ஜாக்கிசானின் நிழல் போன்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார். இது தான் இப்போது வினையாகி விட்டது.

இதற்கு அவர் அணிந்து வந்த ஆடை குறித்தும் அன்றைய தினத்தில் அவரது நடத்தை குறித்தும் அதிருப்தி அடைந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்டப் ஒருங்கிணைப்பாளர் கனிராஜன் என்பவர் பெரியமேடு பொலிஸில் புகார் செய்துள்ளார். அதில் மேற்படி நடிகை மீது வழக்குப் பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும் அப்புகாரில் இந்நிகழ்ச்சியைக் காண குடும்பப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலாசார முறைப்படி ஆடையணிந்து வந்திருந்தனர்.

ஆனால் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் தமிழ் கலா சாரத்தை சீரழிக்கும் வகையிலும்
தமிழக மக்களின் மனங் களைப் புண்படுத்தும் நோக்கத்தோடும் தமிழ்ப் பண்பாளர்கள் முகம் சுளிக்கும் வகையிலும் ஆபாசமாக அரைகுறை ஆடைய ணிந்திருந்தார்.

மேலும் மேடையில் முதல்வர் முன்னிலையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தது மட்டு மன்றி அநாகரிகமான முறையில் அருகில் இருந்தவர்களுடன் சேஷ்டைகளையும் செய்து கொண்டிருந்தார். இப் புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தன. இளைஞர்கள் மனதில் கீழ்த்தரமான எண்ணங்களை உருவாக்கும் முறையில் அமைந்திருந்த அவரது நட வடிக்கைகள் குறித்தும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட் டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கனி ராஜனையும் தசாவதாரம் படத் தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரனையும் அழை த்து விசாரிப்பதாக பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளதாக கனிராஜனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிவாஜி பட விழாவில் கவர்ச் சிகரமான உடையில் வந்ததற்காக நடிகை ஷ்ரேயா சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு எதிராக இந்து மக்கள் கட்சி பிரச்சினை கிளப்பியது. பா.ம.க.வும் பிரச்சினை எழுப்பியது.

இதையடுத்து ஷ்ரேயா மன்னிப்புக் கேட்டார். இந்த நிலையில் தற்போது மல்லிகா
ஷெராவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: