Wednesday, May 28, 2008

எய்ட்ஸ் மருந்து சாப்பிட்டவர் பெண்ணாக மாறுகிறார்

எய்ட்ஸ் மருந்து சாப்பிட்டு வருபவர், பெண்ணாக மாறி வருகிறார்; அவருக்கு மார்பகம் உருவாகி, பெரிதாகி வருகிறது.மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரை சேர்ந்தவர் சனஜோபா; வயது 38. இவருக்கு எய்ட்ஸ் அறிகுறி இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் நிலை எய்ட்ஸ் தடுப்பு மருந்துகளை இவர் சாப்பிட்டு வந்தார். ஓராண்டு இந்த மருந்துகளை சாப்பிட்டுவந்த சனஜோபா உடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவரின் மார்பு திடீரென பெரிதாக ஆரம்பித்தது; பெண் களை போல மார்பகம் வளர்ந்து வருகிறது.

இதையடுத்து, அவர் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. ஆண்களுடன் பேசுவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதையறிந்த டாக்டர்கள், இவரை வரவழைத்து பரிசோதித்துப்பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை. "மருத்துவ வரலாற்றில்மிகவும் அரிதான வளர்ச்சி இது. டில்லியில் உள்ள மருத்துவ நிபுணர்கள் தான் இவரை பரிசோதித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்' என்று கூறினர்.எய்ட்ஸ் தடுப்பு மையத்தின் தலைவர் பிரியோகுமார் கூறுகையில்," எய்ட்ஸ் மருந்து சாப்பிடும் பெண்களுக்கு மார்பகம் பெரிதாக வாய்ப்பு அதிகம். ஆனால், ஆணுக்கு இப்படி மார்பகம் வளர்ந்துள்ளது இது தான் முதன் முறை' என்று தெரிவித்தார்.எய்ட்ஸ் மருந்தால் தான், இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதா என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

No comments: