Wednesday, May 28, 2008

சுட்டுக்கொல்லப்பட்ட பெண் உடைக்குள் பிஞ்சுக்குழந்தை

ஈராக்கில், சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் மேல் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பிஞ்சுக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஈராக் கிர்குக் மாகாணத்தில் அல்டோன் கோப்ரி என்ற கிராமத்தில், இரு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நிலத்தகராறு காரணமாக, இரு பெண்களும் கடத்தி வரப்பட்டு, இந்த இடத்தில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த பெண்களின் உடல் களை மீட்டபோது, ஒரு பெண்ணின் மேல் உடைக்குள் குழந்தையின் முனகல் சத்தம் கேட்டது. அவர் உடலை போலீசார் பரிசோதித்த போது, உடைக்குள் பிஞ்சுக்குழந்தை உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பெண்கள் இருவரும் சகோதரிகள் என்று தெரிந்தது, மற்ற எந்த விவரமும் தெரியவில்லை. வெளியூரில் இருந்து கடத்தி வரப்பட்டுள் ளனர் என்பது உறுதியானது. உயிருடன் மீட்கப்பட்ட பிஞ்சுக்குழந்தையை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அலி முகமது கூறுகையில்,"வழக்கமான ரோந்து போன போது, சாலையோரம் இரு பெண்களும் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். நள்ளிரவில் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அப்போது தான் ஒரு பெண்ணின் மேல் உடையில் பிஞ்சுக்குழந்தை கண்டெடுக்கப்பட்டது' என்றார்.

No comments: