
திரைப்பட நடிகர் ஜான் அமிர்தராஜ் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 67. பாக்யராஜின் "இன்று போய் நாளை வா' படத்தில் இந்தி பண்டிட்டாக நடித்தவர் ஜான் அமிர்தராஜ். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சண்டைகோழி உட்பட 70 படங்களில் நடித்துள்ளார். வில்லன், அரசியல்வாதி வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார். கார்த்திக் நடித்த "கேம்' படத்தை இயக்கியும் உள்ளார். நேற்று முன்தினம் சென்னை, கே.கே., நகரில் உள்ள வீட்டில் இருந்த போது, உடல் சோர்வாக இருந்ததால் அருகில் உள்ள டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.
அதன் பிறகு இரவு 9 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது உடலுக்கு திரைப்பட இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, எழில், லிங்குசாமி, லியாகத் அலிகான், ஹரிராஜன், அனுமோகன், நடிகர் தியாகராஜன், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் இப்ராகிம் ராவுத்தர் உட்பட திரையுலக பிரமுகர்கள் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை மந்தை வெளியில் உள்ள கல்லறையில் ஜான் அமிர்தராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், அனிதா, நான்சி என்ற மகள்களும் உள்ளனர்.

1 comment:
அருமையான மனிதர் இவர்! ஒருமுறை இவர் வேலை பார்க்கும் (நிசத்தில் இவர் ஒரு ஆசிரியர்!) பன்னிமடை பள்ளிக்கு விசிட் அடித்து இவரை நான் டைரக்ட் செய்து சில படங்கள் எடுத்தது இன்றும் பசுமரத்தாணிபோல் நினைவில் இருக்கிறது. அவரது இரு மகள்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்புடன்..
ஓசை செல்லா
Post a Comment