Saturday, May 31, 2008

நடிகர் சிம்பு தலைமையில்......

கனடாவில் தமிழ் ஒசை என்ற பெயரில் புலி ஒசை.

ரவிக்குமார்

கனடா ரொரன்ரோவில் தமிழோசை வானொலி நடாத்திவரும் சிறீ என்பவர் நடிகர் இராஜேந்தரின் மகனும் நடிகருமான சிம்பு தலைமையிலான நடிகைகள் சங்கவி சந்தியா பாடகி வாணிஜெயராம் உட்பட பலரை அழைத்து மேகா ஸ்ரார் என்ற பெயரில் மாபெரும் கலைநிகழ்ச்சி ஒன்றை சனிக்கிழமை (31-மே—08) நடாத்த இருக்கிறார். ரொரன்ரோவில் மிகவும் வாடகைக்கட்டணம் கூடிய றொஜர்ஸ் சென்ரரில் (;ROGERS CENTRE) தமிழ்ஒசையின் நிகழ்ச்சி என்ற பெயரில் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரிப்பதற்கே இந்த நிகழ்ச்சி நடாத்தப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது

கனடாவில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டபின்னர் புலிகளின் நிதிசேகரிப்பு பலவழிகளிலும் தடைப்பட்டுள்ளதால் இப்படியான நிகழ்ச்சிகள் மூலம் பணம்சேகரிக்கும் யுக்திகளை கையாண்டு வருகின்றனர் இதற்காக தங்களுடன் தொடர்பில்லாத பொதுவானவர்கள் என்று அடையாளப்பட்டுள்ளவர்களை இதற்காக பயன்படுத்துகிறார்கள். தமிழோசை வானொலி சிறீ என்பவரும் இந்தப்பட்டியலில் அடங்குகிறார். இவர் அடிக்கடி இந்தியா சென்று வருபவர் சினிமாவட்டாரங்களில் அறிமுகமானவர் என்பதால் இவர்மூலமாக இவரின் வானொலியின் பெயரைப்பாவித்து இந்த நிகழ்ச்சியை புலிகள் ஒழுங்கு செய்துள்ளார்கள். தமிழோசை வானொலி சிறீ தனது வானொலியை நடாத்த பணம் இல்லை என்றும் புலிகளின் C.M.R வானொலியால் தான் அவர்களுடன் போடடிபோட்டு வானொலி நடாத்தமுடியாமல் இருக்கிறது என்று தனது வானொலியை மூடும் நிலையில் இருந்தவர்.

ஆனால் றொஜர்;ஸ் சென்ரருககு மட்டும் 80ஆயிரம் டொலர். கட்டவேண்டும் இவ்வளவு பணம் கொடுத்து இவரால் நடாத்தமுடியாது என்பது இவருடன் பழகுபவர்களுக்குத் தெரியும் இந்த நிகழ்ச்சிகளுக்கு புலிகளின் T.V.I தொலைக்காட்சியும் சி.எம் ஆர் வானொலியும் அடிக்கடி விளம்பரம் கொடுத்தபடி உள்ளனர். .இவர்கள்தான் இந்த நிகழ்ச்சிக்கு மீடியா ஸ்பொன்ஸர் செய்துள்ளார்கள். மற்றும்; பாபு கேற்றரிங் ஏசியன் டெக்ஸ்ரைல்ஸ் நியு ஸ்பைஸ்லான்ட் ஆகியன பிளாட்டினம் ஸ்பொன்சர் செய்துள்ளனர். இந்த மூன்று ஸ்தாபனங்களும் புலிகளினுடையது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீட் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இலங்கையில் இருந்து வருகிறார்.

தமிழினமே வெட்கித்தலை குனியவேண்டிய ஓரு அறிவிப்பு செய்கிறார்கள்.

இளைஞர்களே! யுவதிகளே! வாருங்கள் நிகழ்ச்சிக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை பின்னேரம் (30-05-08) பேர்ச்மவுண்ட் அன்ட் பார்மசி சந்திப்பில் உள்ள் பிறின்சஸ் பாங்கிட் மண்டபத்தின் நுழைவாயிலில் ஆளுக்கு 250 டொலர் கட்டினால் நடிகர் சிம்புவுடனும்நடிகை சங்கவியுடனும் இருந்து உணவு அருந்தலாம்.

நல்லவேளையாக வேறுவிதமாக விளம்பரம் செய்யவில்லை. தொல்திருமாளவன் போன்றவர்கள்; இந்த விளம்பரத்தை கேட்கவேண்டும்.

புலிகளினால் 6அல்லது 7வருடங்களுக்கு முன்னர் கால்றன் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரில் ஈழத்தமிழன் என்ன இளிச்சவாயனா? என ஓரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார்கள். அதில் தமிழகசினிமா நடிகர்களை சிலர் கனடாவிற்குஅழைத்து நிகழ்ச்சிகள் வைப்பதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதித்துக்கொண்டு போகிறார்கள் என்ற சாரம்சத்துடன் வெளியானது. ஆனால் இப்போது புலிகளுக்கு பணத்தட்டுப்பாடு வந்தவுடன் தமிழகசினிமா நடிகர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடாத்துகிறார்கள். முன்பு பிரபல நடிகர் ரஜனிக்காந் கனடாவுக்கு வந்தபோது அந்த நிகழ்ச்சிக்கு யாரும் செல்லவேண்டாம் என்று ஓரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார்கள். நடிகர் விஜயகாந் அண்மையில் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது தவறு இல்லை பேட்டி அளித்திருந்தார். உடனே புலிகளின் ஈழமுரசு பத்திரிகை விஜயகாந்தை திட்டி எழுதினார்கள். அத்துடன் பாபுகேற்றிங் உரிமையாளர் இராஜகுலேந்திரன் முன்பு யாரும் தமிழக சினிமா நட்சத்திரங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடாத்தும்போது அந்த விளம்பரங்களை அவர் கடையில் வைக்கவோ அல்லது ஒட்டவோ விடமாட்டார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிளாட்டினம் ஸ்பொன்ஸ்சர் என பெரிதாக விளம்பரம் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேணி இணையம்
http://www.thenee.com/html/310508.html

No comments: