
லாரன்ஸ் நடத்தும் ஊனமுற்றோர் காப்பகத்தின் ஆயுள் முழுவதற்குமான உணவு செலவை ஏற்றுள்ளார் ரஜினிகாந்த்.
"சென்னை அசோக் நகரில், லாரன்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் காப்பகம்
நடத்தி வருகிறேன். அங்கு ஏராளமான ஊனமுற்றோர் தங்கி இருக்கின்றனர்.
என் காப்பகத்திலுள்ள ஊனமுற்றோருக்கு உணவு அளிப்பதற்கு ஆகும் செலவு
அனைத்தையும் ரஜினி ஏற்றுக்கொண்டுள்ளார்" என்றார் லாரன்ஸ்.
இப்போதுள்ள எண்ணிக்கை மட்டுமல்ல, இனி காப்பகத்தில் சேரப்போகும்
ஊனமுற்றோரின் உணவுச் செலவையும் அவர் ஏற்றுக்கொள்வதாக சொல்லி
இருக்கிறார் என்று லாரன்ஸ் மேலும் தெரிவித்தார்.
இது ரஜினியின் நல்ல மனதை காட்டுகிறது. அவருக்கு நன்றி.

No comments:
Post a Comment