Saturday, May 10, 2008

கருணாஅம்மான் இலங்கை வந்தால் முதலமைச்சர் பதவியினை வழங்குவேன்

கருணா அம்மான் தமது தலைவர் எனவும் அவர் இலங்கை வரும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியினையும் வழங்கத் தயாராகவுள்ளதாக ரிஎம்விபி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் துணைப் பொறுப்பாளர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்றயதினம் பிபிசிக்கு வழங்கிய செவியொன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களும் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்களும் தமது அமைப்பினால் அச்சுறுத்தப்படுவதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் தோல்வியைத் தழுவவுள்ளவர்கள் இவ்வாறான பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே தாம் ஆயுதங்களை பாதுகாப்பிற்கு வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர் ஏனைய அரசியல் இயக்கங்களைப் போன்று தாம் அழிந்து போவதற்கு தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: