மியன்மாரைத் தாக்கிய சூறாவளி காரணமாக, அந்நாட்டு ஜனநாயக ஆதரவு தலைவர் ஆங் சான் சூகி தடுத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் கூரை பெயர்க்கப்பட் டுள்ளதாகவும் அவரது இருப்பிடம் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி யுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஆங் சான் சூகியின் அயல் வீட்டில் வசிப்பவர் விபரிக்கையில், இச் சூறாவளி காரணமாக ஆங் சான் சூகி, காயமடைந்தாரா அல்லது அங்கு போதிய உணவு, நீர் உள்ளதா என்பது குறித்து தனக்கு அறிய முடியாதுள்ளதாக கூறினார்.
நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி கடந்த 18 வரு டங்களில் 12 வருட காலத்தை வீட்டுக் காவலில் கழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment