திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஏராளமானோர் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கே. செந்தில் நாதன் (21 வயது) கடந்த 1990 ஆம் ஆண்டு இங்கு வந்தார். கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவர் தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பொலிஸார் விரைந்து வந்து செந்தில் நாதனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Monday, May 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment