
விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடித்துள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி,இந்திய மத்திய அரசுக்கு கொடுத்து வந்த அழுத்தம் காரணமாகவே,இந்த முடிவு அறிவிக்கபட்டுள்ளது.எதிர்வரும் 14-5-2009 வரை இந்த தடை உத்தரவு நீடிக்குமென தெரிவிக்கபட்டுள்ளது.
முன்நாள் இந்திய பிரதமர் ராஜீவ் படுகொலைக்கு பின்னர் 1992 ஆம் ஆண்டிலிருந்து, புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யபட்ட நாள் முதல் ,வருடா வருடம் புலிகள் மீதான தடை நீடிக்கபட்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.ஈழ.தமிழ் உணர்வாளர்களான வைக்கோ,நெடுமாறன்,றாமதாஸ் ஆகியோரின் தீவிர எதிர்புக்கு மத்தியிலும் இந்த தடை கொண்டுவரபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment