பர்மாவை ஐந்து நாட்களுக்கு முன்னர் தாக்கிய கடுமையான சூறாவளியின் காரணமாக பத்து லட்சம் பேர் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த ஐக்கிய நாடுகளின் விமானம் வியாழனன்று ரங்கூன் சென்றடைந்துள்ளது.
உதவிப் பொருட்களுடன் ஐ.நாவின் மேலும் இரண்டு விமானங்கள் அங்கு சென்றடைய அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்க அரசின் இராணுவ விமானத்துக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறான ஒரு சூறாவளியின் தாக்கத்தை சமாளிக்க வளர்ந்த நாடுகளே சிரமங்களை சந்திக்கக் கூடிய நிலையில், கிடைக்கும் அனைத்து உதவிகளையும் பர்மா ஏற்றுக்கொள்வது என்பது முக்கியமானது என பிரிட்டிஷ் அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் தனது அண்டையிலுள்ள நேச நாடுகளிடமிருந்து உதவிப் பொருட்களை ஏற்றி வந்த விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment