பர்மாவை கடும் சூறாவளி தாக்கி ஐந்து நாட்களாகிய நிலையில், ரங்கூன் நகரின் வீதிகள் சுத்தம் செய்யப்படுவதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன என்று தெற்கு பர்மாவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
சூறாவளியில் வீழ்ந்த ஆயிரக்கணக்கான் மரங்களை அப்புறப்படுத்துவதில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளது காணக்கூடியதாக இருக்கிறது என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
ரங்கூன் நகரின் பெரும்பகுதிகளில் இன்னமும் மின்சாரம் கிடைக்காத நிலையுள்ளது என்றும், எரிபொருட்களின் தட்டுப்படும் கூடுதலாக இருக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ரங்கூனின் மேற்குப்புறம் இருக்கும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐராவதி பாசனப் பகுதிகளை நோக்கி நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு குறைந்த அளவு வாகனங்களே செல்கின்றன என்றும், பெரிய அளவிலான நிவாரண நடவடிக்கைகள் எதனையும் காணக்கூடியதாக இல்லை என்றும் பிபிசியின் செய்தியாளர் மேலும் தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு இன்னமும் சென்றடையாத நிலை காணப்படுகிறது. உயிர் தப்பியவர்கள் உணவுக்கும் உறைவிடத்துக்கும் சிரமப்படுகிறார்கள்.
சூறாவளி தாக்குதலையடுத்து, நோய்கள் பரவுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment