Saturday, May 3, 2008

இஸ்லாமிய திருமண அமைப்பு சிறு கண்ணோட்டம்

இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டமாகும். இறைவன் இவ்வுலகில் மனிதனைப் பகுத்தறிவுடன் ஆண், பெண் இரு வர்க்கங்களாகப் பிரித்து உயர்ந்த அந்தஸ்துடன் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். இஸ்லாமிய சமூக அமைப்பில் கல்வி, கலாசார, பொருளா தார, வாழ்வு, திருமணம் போன்ற பல உரிமைகளை பார்க்க வரம்புக்குட்பட்டு ஹலாலான முறையில் தேடிக் கொள்ள வழி வகுத்துக் கொடுத்துள்ளது. இதன் மூலம் உடல், உயிர், மார்க்கம், தன்மானம் அந்தஸ்து போன்ற விடயங்களை பாதுகாக்கவும் பலமுறைகளை இஸ்லாம் எமக்கு வழங்கியுள்ளது.

குடும்பம் என்ற கட்டுக் கோப்புக்குள் கணவன், மனைவி முறையில் வாழ "நிக்காஹ்'' எனும் திருமண பந்தத்தை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இஸ்லாமிய தலைமைத்துவப் பயிற் சியை வழங்குகிறது.

""அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள் என அல்குர்ஆன் கூறுகிறது (1: 187) மேலும் (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவி இஸ்லாத்தில் திருமணத்தைப் போன்று அதிக அன்பும், கண்ணியமுமிக்க வேறெந்த வாழ்க்கை அமைப்புமில்லை.

(ஹதீஸ்) குடும்ப வாழ்க்கை என்றாகும் போது ஒற்றுமை, கண்ணியம், கட்டுப்பாடு, சமூகப் பொறுப்பு என பல்வேறு உணர்வுகள் ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் சிறந்த இஸ்லாமிய சமூகமொன்று தோற்றுவிக்கப்படுகிறது. பெண் என்பவள் மென்மையான படைப்பாகும். அவள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதச் சொத்து; நிச்சயமாக இது பற்றி மறுமையில் கேள்வி கணக் குக் கேட்கப்படும் என்றெல்லாம் மார்க்கம் ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்க இஸ்லாமிய சமூகமோ இன்று வரம்பு மீறி தான் நினைப்பது தான் மார்க்கம் என்று போட்டி போட்டுக் கொண்டு வீணான இறைவனுக்குப் பொருத்தமில்லாத ஆடம்பரமாக ஹோட்டல்களிலும் மண்டபங்களிலும் கோடி கோடியாக கொட்டுகிறார்கள். இஸ்லாத்தில் இல்லாத பல விடயங்கள் இதன்போது சேர்க்கப்பட்டு இறுதியில் பாவத்தில் முடியும் திருமணங்கள் எத்தனையோ! சுருங்கக் கூறின் ஆண், பெண் விருப்பத்துடன் மணமக்களின் தந்தை இரு சாட்சிகளுடன் எளிய முறையில் கரம்பிடிப்ப தையே கண்ணியப்படுத்தி யுள்ள இஸ்லாம். அவனை ஒழுங்காக நடத்த வேண்டும், திட்டவோ தண்டிக்கவோ (கன்னத்தில் ஓங்கி அறைதல்) கூடாது என்ற வரையறையையும் விதித்துள்ளது. பெண்களின் விருப்பத்திற்கு மாறாக பொருத்தமற்ற ஆண்களை திருமணம் முடித்துக் கொடுத்தல் கோடிக் கணக்கில் சீதனம் கொடுத்தல் என பெண்ணின் பெற்றோர் இறுதியில் நடுத்தெருவில் நிற்குமளவிற்கு இன்றைய இஸ்லாமிய திருமணமுறை அமைந்துள்ளது. மட்டுமின்றி பெண்ணின் வாழ்க்கை இடைநடுவில் முற்றுப் பெறும் துர்ப்பாக்கிய நிலையும் எம் சமூகத்தில் காணப்படுகிறது.

படித்த, உயர் பதவிகளில் உள்ளோர் சீதனப் பேயாட்டத்தில் ஈடுபடுவது மட்டுமில்லாமல் அவர்களது பெற்றோர்களும் இதற்குத் துணை போவதும் நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இதன் மூலம் சமூகத்தில் பல பிரச்சினைகளும் குற்றங்களும் தலைவிரித்தாடுகிறது. வயதுக்கு வந்த எத்தனையோ பேர் இன்று வாழ்க்கைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பொறுப்புக் கூறுபவர் யார்? இறைவன் எமக்கு அளித்துள்ள அருட் கொடைகளை சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமாயின் நிச்சயமாக இறைவனின் பிடி கடுமையாகத்தான் இருக்கும்.

சமூகத்தில் உள்ள பண வசதி படைத்தவர்கள் ஏழைகளுக்கான திருமண விடயத்தில் உதவ முன்வர வேண்டும்.

தொழில், சொத்து, சுகம் பிள்ளைகள் என்பன இவ்வுலகில் இறைவன் நாடினால் எமக்குக் கிடைப்பவை அவைகள் சோதிப்பதற்கான தண் டனையாகவும் அருட் கொடைகளாகமிருக்க லாம். உதாரணமாக, நாம் தூங்குவதற்காக தலை யணைக்கு மேல் எத்தனை தலையணைகளை வைத்தாலும் தூக்கத்தையும் விழிப்பையும் தருப வன் யார் சற்று சிந்திப்போமானால் இறைவனின் வல்லமையையும் அருட் கொடைகளையும் இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

சீதனக் கொடுமையின் காரணமாக வாழ்க்கை தேடி இன்று வெளிநாடு வரை சென்று அங்கு படும்பாடு யாரறிவார்? இவ்வாறான கலாசார சீரழிவுகள் ஏற்படுவதற்கு யார் காரணம்? ஏழைகள் மீது விதிக்கப்படும் ஸகாத், சதக்கா என்பன ஒழுங்காக வழங்கப்பட்டால் இந்நிலை ஏற்படுமா? இவ்வாறான நிலைமை ஏற்படாமலிருக்க பள்ளிவாசல்கள், உலமாக்கள் மார்க்க அறிஞர்கள் ஒன்று சேர்ந்து நல்ல பல திட்டங்களை வகுத் துச் செயற்பட வேண்டும், இளைஞர்கள் எதுவித சீதனமுமில்லாமல் பெண்களைக் கரம் பிடிக்க முன்வர வேண்டும்.

வீணான செலவுகள் செய்து திருமணங்கள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இவைகள் மூலம் தான் சிறந்த ஒழுக்கமுள்ள இஸ்லாம் கூறிய இஸ்லாமிய சமூதாயமொன்றைக் கட்டி யெழுப்ப முடியும்.

ஏ.ஜே. புர்ஹான்

No comments: