லெபனானில் இலங்கை யுவதியொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பெய்ரூட்டுக்கு அருகிலுள்ள பகுதியொன்றிலேயே கடந்த 25 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
சம்பவத்தில், 26 வயது இலங்கை யுவதியான ரசிகா திஸாநாயக்க என்பவரே உயிரிழந்திருப்பதாகவும், இவர் அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரான எஸ்.கே. ருஹுனுகே தெரிவித்தார்.
இவர் பிறந்தநாள் விருந்துபசார வீடொன்றிற்கு சென்றிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கிறார்.
லெபனானில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவரின் ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை பட்டாசுகளை கொளுத்தி ஆடிப்பாடி வெளிப்படுத்தியதுடன் மட்டுமல்லாது வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர்.
இதன்போதே மேற்குறித்த யுவதி மீதும் துப்பாக்கி ரவை பாய்ந்திருக்கிறது. சம்பவத்தை அடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.
டிட்டோ குகன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment