Saturday, May 31, 2008

‘செல்வி மகேஸ்வரி வேலாயுதம் படுகொலை” மறைக்கப்பட்ட உண்மைகள்?

கடந்த வாரம் ஈபிடிபி துணை இராணுவ ஆயுதக்குழுவின் உப தலைவரென்று கூறப்படும் யாழ் வடமராட்சி கரவெட்டி ஆனைப்பந்தியை சேர்ந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம், அவரது தாயாரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டதும், அக்கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாக இலங்கை அரசும், அதன் துணை இராணுவக்குழுக்களும் போட்டி போட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிந்ததே.

ஈபிடிபி துணை இராணுவ ஆயுதக்குழுவின் உப தலைவரென்று கூறப்படும் செல்வி மகேஸ்வரி வேலாயுதம், கொழும்பில் அவர் சார்ந்த துணை இராணுவக்குழுவின் தலைவரான திரு டக்லஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்திலும், அவரது இன்னொரு வீட்டிலுமே கடந்த காலங்களில் வசித்து வந்தார். இவர் வசித்த இவ்வாழ்விடங்கள் ஈபிடிபி ஆயுததாரிகளின் பாதுகாப்புக்கு அப்பால் நூற்றுக்கு மேற்பட்ட சிறிலங்காவின் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு உட்பட்டும் இருந்தது.

செல்வி மகேஸ்வரி வேலாயுதம், தனது கொழும்பு வசிப்பிடங்களிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம், ஈபிடிபி துணை இராணுவக்குழுவின் ஆயுததாரிகள், சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் வாகனங்கள் சூழ, ஓர் சிறிலங்கா அரச அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக்கும் இணையான பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

செல்வி மகேஸ்வரி வேலாயுதத்துக்கு வழங்கப்பட்டிருந்த இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம், இவர் ஈபிடிபி துணை இராணுவ ஆயுததார குழுவின் முக்கிய உறுப்பினர் என்பதற்கு அப்பால், ஈபிடிபி துணை இராணுவ ஆயுததார குழுவின் தலைவரும், சிறிலங்கா அமைச்சருமான திரு டக்லஸ் தேவானந்தாவின் சட்டபூர்வமற்ற மனைவி என்பதே முக்கிய காரணமாகும். இது எவராலும் மறைக்கவோ அன்றி மறுக்கவோ முடியாத உண்மையாகும்.

“செல்வி மகேஸ்வரி வேலாயுததத்துக்கு வைக்கப்பட்ட இலக்கானது, ஈபிடிபி துணை இராணுவ குழுவின் தலைவரான டக்லஸ் தேவானந்தாவிற்கு வைக்கும் இலக்குக்கு சமமானது” என துணை இராணுவ குழுக்களுக்கு ஆதரவான இணையத்தளம் ஒன்று குறிப்பிடும் அளவிற்கு, செல்வி மகேஸ்வரி வேலாயுதம் துணை இராணுவ குழுக்களில் முக்கியமானவர்.

செல்வி மகேஸ்வரி வேலாயுதம், தனது தாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், வடமராட்சி சிறிலங்கா புலனாய்வுத்துறையின் தலைமையகம் அமைந்துள்ள மிகப் பாதுகாப்பான பிரதேசத்தினுள் உள்ள தாயாரின் வீட்டுக்கு, வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த சகோதரங்களுடன் பார்க்கச் சென்ற இடத்திலேயே மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிற்து.

சிறிலங்காவின் துணை இராணுவ ஆயுததார முக்கியஸ்தகரான செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தை படுகொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகளாயின், எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படாமல், யாழ் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டங்கள் செறிந்த வடமராட்சி கரவெட்டி பகுதிக்கு எவ்வாறு செல்ல அனுமதிக்கப்பட்டார்? இவரது பயணம் முன்கூட்டியே விடுதலைப் புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டதா? அல்லது, அண்மைக்காலங்களாக ஈபிடிபி துணை இராணுவ ஆயுதக்குழுவில் “புலிகளின் பெயரில்” நடைபெறும் உட்படுகொலைகளில் இன்னொன்றாக நடத்தப்பட்டதா?

யார் இந்த ‘செல்வி மகேஸ்வரி வேலாயுதம்’?

யாழ் வடமராட்சி கரவெட்டி ஆனைபந்தியை சேர்ந்த வேலாயுதம், ஈஸ்வரி என்ற பெற்றோர்களுக்கு பிறந்த பத்து பிள்ளைகளில் ஒருவர். தாயார் ஆசிரியராயினும் வறுமை நிலையில் குடும்பம். பாடசாலை காலங்களில் கல்வியில் சிறந்து விளங்கினாலும், தமிழ் பண்பாட்டை மீறிய நடவடிக்கைகளினால், ஊரறிந்த பெண்மணி(மேலதிகமாக குறிப்பிட விரும்பவில்லை). கொழும்பில் சட்டக்கல்வியை கற்ற காலத்தில் காதல் தோல்வியினால் மனம் குழம்பியிருந்த காலத்தில், 83 இனக்கலவரங்களை அடுத்து இரு சகோதரர்கள் ரெலோ இயக்கத்தில் இணைந்து தமிழ்நாட்டுக்கு சென்றதனால், செல்வி மகேஸ்வரியும் தமிழ்நாட்டுக்கு செல்லத் தீர்மானித்து சென்றார்.

தமிழ்நாட்டுக்கு சென்ற ஆரம்ப காலங்களில். அப்போது தமிழ்நாட்டிலிருந்து “தமிழர் தகவல் நிலையம்” என்ற பெயரில் தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனினால் நடத்தப்பட்ட அமைப்பில் இணைந்து செயற்பட்ட செல்வி மகேஸ்வரி வேலாயுதம், பின் சில காலங்கள் சந்திரகாசனுடன் சில காலங்கள் ஒன்றாகவும் வாழ்ந்தவரென்றும் கூறப்படுகிறது.

பின் அவ்வமைப்பிலிருந்து விலகி முழுநேர ரெலோ உறுப்பினராக செயற்பட ஆரம்பித்த காலத்தில், ரெலோவின் அன்றைய தலைவரான சிறி சபாரட்ணத்துடன் இவரது நெருக்கமான உறவு, ரெலோ இயக்கத்தினுள் சில பாரிய விரிசல்களை ஏற்படுத்தவும் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இக்கால கட்டத்திலேயே ரெலோ அமைப்பிலிருந்த இவரது இரண்டாது சகோதரனான ‘கம்பன்’ என்றழைக்கப்படும் விக்கி கரவெட்டியில் வைத்து சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின் நீண்ட காலம் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்து 80களின் இறுதியில் விடுதலையாகியவுடன் ரெலோ இயக்கத்தினராலேயே நிதி மோசடி குற்றச்சாட்டில் கொழும்பில் அவர் தங்கியிந்த வீட்டில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சிறி சபாரட்ணம் விடுதலைப் புலிகளினால் யாழில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு, ரெலோ இயக்கம் தடை செய்யப்பட்டதும், செல்வி மகேஸ்வரி வேலாயுதம் மீண்டும் சந்திரகாசனிடம் அடைக்கலம் புகுந்து, அவருடன் வாழ்ந்து வந்தார். அக்கால கட்டத்திலேயே இன்றைய ஈபிடிபி துணை இராணுவ குழுவின் தலைவரும், ஈ.பி.ஆர்.எல்.எப் இருந்து நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் தங்கியிருந்த டக்லஸ் தேவானதாவுடன் நட்பு ஏற்பட்டது.

பின் பிரேமதாஸா காலத்தின் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்னாவினால், டக்லஸ் தேவானந்தா தமிழ்நாட்டிலிருந்து கூட்டி வரப்பட்டு ஆயுதங்கள் வழங்கப்பட்டு துணை இராணுவக்குழுவாக உருவாக்கம் பெற்றதை அடுத்து, செல்வி மகேஸ்வரி வேலாயுதமும் தமிழ்நாட்டிலிருந்து டக்லஸ் தேவனந்தாவினால் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் ஈபிடிபி துணை இராணுவ குழுவின் தலைவரான டக்லஸ் தேவானந்தாவின் ‘அரசியல் மதியுரைஞர்’ எனும் போர்வையில் அத்துணை இராணுவ குழுவால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் செயற்பாட்டுகளுக்கு உருமறைப்பாளராக இருந்துள்ளார். துணை இராணுவ குழுவால் அரங்கேற்றப்பட்ட உட்கட்சிப்படுகொலைகள், பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் படுகொலைகளாகட்டும் செல்வி மகேஸ்வரி வேலாயுதத்துக்கு தெரிந்திராமல் நடந்திருக்க முடியாது என கூறப்படுகிறது.

இறுதி நாட்களில், நீண்ட காலமாக சட்டபூர்வமற்ற மனைவியாக வாழ்ந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதத்துக்கும் டக்லஸ் தேவானந்தாவிற்கும் இடையே பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இம்முரண்பாடுகள் துணை இராணுவ ஆயுத குழு ஈபிடிபியின் செயற்பாடுகளுக்கு அப்பால், டக்லஸ் தேவானந்தாவிற்கும் சில சிங்கள இனத்தைச் சார்ந்த இளம் யுவதிகளுக்கும் ஏற்பட்ட விரும்பத்தகாத உறவுகளே காரணங்கள் என நம்பகரமாக தெரிகிறது.

இறுதி கால இம்முரண்பாடுகளினால் ஈபிடிபி துணை இராணுவ ஆயுததார குழுவின் செயற்பாடுகளில் செல்வி மகேஸ்வரி வேலாயுதம் பெரியளவில் ஈடுபடவில்லை. கிட்டத்தட்ட ஒதுங்கியே இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

இச்சூழ்நிலைகளில்தான் யாழ் கரவெட்டியில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த காலங்களில் ஈபிடிபி துணை இராணுவ ஆயுதக்குழுவில் உட்கட்சிப்படுகொலைகளுக்கு குறைவே இருந்ததில்லை. ஈபிடிபி துணை இராணுவக்குழுவின் பத்திரிகையான ‘தினமுரசு’ இன் தோற்றுவிப்பாளரும், பத்திரிகையாளருமான அற்புதன் முதல் சின்னபாலா என தொடர்ந்து இன்று செல்வி மகேஸ்வரி வேலாயுதம் வரை வந்து நிற்கிறது.

செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தை தவிர்ந்த ஏனையோர் துணை இராணுவ ஆயுதக்குழுவினுள் தோன்றிய கருத்து முரண்பாடுகள், நிதிப்பிணக்குகள், சந்தேகங்களின் பால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஆனால் இவரோ இவைகளுக்கு அப்பால் அவர் சார்ந்த துணை இராணுவக்குழுவின் தலைவரான டக்லஸ் தேவானந்தாவின் விருப்பு வெறுப்புகளினால் பலி எடுக்கப்பட்டோ அல்லது கொடுக்கப்பட்டோ உள்ளார்.

இக்களை அகற்றலை விடுதலைப் புலிகள் செய்ய விரும்பினார்களோ, இல்லையோ ஆனால் ‘புலிகளின் பெயரில்’ அகற்றப்பட்டிருக்கிறது.

http://www.orunews.com/?p=1101

No comments: