கடந்த வாரம் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் விடுதலைப் புலிகளின் இரு மூத்த போராளிகள் மரணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்புலிகளின் முதன்மை இயந்திர பொறியியலாளராகச் செயற்பட்ட லெப்டினன்ட் கேணல் கடாபியும் கனரக படைக்கல முதன்மைப் பயிற்சியாளரான லெப்டினன்ட் கேணல் வைகுந்தனுமே பலியாகியுள்ளனர்.
இந்த இரு போராளிகளும் எவ்வாறான சூழ்நிலையில் உயிரிழந்தனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை, இரு போராளிகளினதும் இறுதி வணக்க நிகழ்வுகளும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் இந்நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment