
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழர் தாயகக் கொள்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பின் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பயங்கரவான தீவிரவாத இயக்கமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளை தமது அமைப்பு நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், கிழக்கில் இது அமுல்படுத்தப்பட்டால் வடக்கிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக அமையும் என பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் பிரசூரிக்கப்படும் தினமின நாளேட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எங்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாத இயக்கத்திற்கு வெளிப்படையாக சவால் விடுக்ககும் அமைப்பே தமது அமைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விகளுக்கு எமது பிளவும் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதனால் அவர்கள் எந்த நேரமும் தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆயுதமேந்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தார்மீகப் பொறுப்பு தமக்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு பாதுகாப்பு உள்ள போதிலும் எங்களது பல உறுப்பினர்களின் உயிர்களை விடுதலைப் புலிகள் காவு கொண்டுள்ளனர். புலிகளின் தலைவருக்கு கொலை செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது என பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கப்பெற்றால் விடுதலைப் புலிகள் பூண்டோடு அழிவடைந்விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் ஆயுதங்களை களையத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும், அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மானிக்கு வழங்கப்பட வேண்டிய உரிய மரியாதை அவர் இலங்கை வந்தால் வழங்கப்படும் என பிள்ளையான் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment