
இந்தியாவின் உயரமான பெண் இவர்தான். 21 வயதாகும் ஸ்வெட்லனா சிங், மீரட்டை சேர்ந்தவர். இவரது உயரம் 7.2 அடி (219 செ.மீ.). தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாய்வதுதானே இயல்பு. இவரது பையன் கரண் 10 மாத குழந்தை. ஆனால் இப்போதே 3.3 அடி (100.5 செ.மீ) உயரம் வளர்ந்து விட்டான். எடை 24 கிலோ. இந்த வேகத்தில் போனால் நாட்டின்... ஏன் உலகத்தின் உயரமான மனிதன் என்ற பெருமையை கரண் பெற்றுவிடுவான் என ஸ்வெட்லனா நம்புகிறார்.

No comments:
Post a Comment