Saturday, May 31, 2008

பின்லேடனை பிடிக்க புதிய உத்தி

சர்வதேச பயங்கரவாதி பின்லேடனை பிடிப்பதற்காக புதிய உத்தியை அமெரிக்கா பயன்படுத்தி உள்ளது. அது தீப்பெட்டிகளில் பின்லேடன் படத்தை அச்சிட்டு, அதோடு அவர் தங்கி இருக்கும் இடம் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.20 கோடி பரிசு கிடைக்கும் என்ற விவரத்தையும் அச்சிட்டு பழங்குடி இன மக்கள் வசிக்கும் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் விநியோகம் செய்து வருகிறது.

பின்லேடன் இருக்கும் இடம் பற்றிய விவரம் தெரிந்தவர்கள், அருகில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். தபால் அல்லது ஈமெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அதன் விவரங்களையும் கொடுத்து உள்ளனர்.

இந்த விவரங்கள் உருது மொழியில் அச்சிடப்பட்டு உள்ளன.

No comments: