Monday, June 9, 2008

2010-ல் வருகிறது தொடுதிரை கணினி

இனி கணினியை இயக்க மவுஸ், கீ போர்டு தேவை யில்லை. ஒலி மற்றும் தொடு திரை முறையில் இயங்கும் கணினி விரைவில் வரப்போகிறது. பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இவ்வகையான கணினியை வடிவமைக்கிறது.
கனடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பில் கேட்ஸ், எதிர் காலத்தில் ஒலி மூலமாகவும், பேனாவால் தொட்டாலும் இயங்கக் கூடிய கணினி வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் திரையைத் தொட்டு கணினியில் வேலை செய்ய முடியும். கணினி நீங்கள் சொல்ல வருவதை எளிதாகப் புரிந்து கொள்ளும். இதற்கு மவுஸ், கீ போர்டு போன்றவற்றின் தேவை இருக்காது. இம்மாதிரியான கணினிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்றார்.
மைக்ரோசாப்டின் மற்றொரு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் தொடுதிரை அய்.போன் எல்லோரையும் கவர்ந்துள்ளது. தற்போது மொபைல் போன், ரிமோட் கன்ட்ரோல் போன்றவை கூட தொடு திரையில் இயங்குகின்றன. அதே போன்று இந்த முறையில் கணினியும் வடிவமைக்கப்படுகிறது.
தொடு திரை என்பது கணினியின் டிஸ்பிளே திரை. இதிலுள்ள படங்களையோ, சொற்களையோ தொடும்போது கணினி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இதற்கு மவுஸ், கீ போர்டு தேவையில்லை.

No comments: