Monday, June 9, 2008

இலங்கைப் பிரச்சினைக்கு இரு தீர்வுகள்

இலங்கையில் பத்திரிகைகளுக்கு ஆட்சி யாளர்கள் நெருக்கடி அளிக் கின்றனர் என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
இலங்கை எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரம சிங்கே கோவை சென்றுவிட்டு அங்கிருந்து விமானத்தில் நேற்று சென்னை வந்தார். விமான நிலலயத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:

இலங்கையில் தற்போது அமைதியற்ற சூழ்நிலை நிலவு கிறது. கடந்த வியாழனன்று நான் நாடாளுமன்றம் சென்ற போது குண்டு வெடித்து ஒரு வர் உயிரிழந்தார். இலங் கையில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் வெளி உலகுக்குத் தெரிவதில்லை.
இலங்கையில் பத்திரிகை களுக்கு ஆட்சியாளர்களால் நெருக்கடி கொடுக்கப் படுகிறது. எனவே, அங்கு நடப்பவைகள் மறைக்கப்படு கின்றன. இலங்கையில் நடக்கும் இது போன்ற சம்பவங்களைக் கண்டித்து எனது கட்சியின் சார்பில் மிகப் பெரிய அளவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவிருக்கிறேன்.

இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண 2 முக்கிய விஷயங்கள் உள்ளன. ஒன்று, அங்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படவேண்டும். மற்றொன்று அதிகாரங்கள் ஒரு சில இடங்களில் மட்டும் குவியாமல் இலங்கையில் வாழும் அனைத்துத் தரப்பின ருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இலங்கைப் பிரச் சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். ஆனால், ராஜபக்சே அரசு இதைச் செய்ய மறுப்பது பேரிழப்பாகும். இவ்வாறு ரணில் விக்ரம சிங்கே கூறினார்.

No comments: