Thursday, June 19, 2008

33 இலங்கைத் தமிழர் இத்தாலியில் கைது

விடுதலைப் புலிகளுக்கு உதவியளிப்பதாக குற்றம் சாட்டி 33 இலங்கைத் தமிழர்களை இத்தாலிப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
இத்தாலியின் தென்பகுதியான நேபிள்லிலிருந்து வடபகுதியான போலோக்னா வரையும் சிசிலித்தீவிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சுமார் 200 பொலிஸார் 33 தமிழர்களை கைது செய்திருப்பதாக பயங்கரவாத தடை நடவடிக்கைகளுக்கான பொலிஸ் பிரிவின் உயரதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த 33 பேரும் புலிகள் அமைப்பின் உறுப்புரிமையை பெற்றிருப்பதாகவும் புலிகளுக்கு நிதி உதவியளிப்பதாகவும் சந்தேகப்பட்டு கைது செய்திருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் உள்ளது.

No comments: