Thursday, June 12, 2008
“ஐயோ என்ட கதிர்காமத்துக் கந்தா….”
கதிர்காமத்திலிருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் சிலை ஒன்று தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டது. ஒரு அடி உயரமுள்ள 300 ஆண்டுகள் பழைமையான இந்த முருகன் சிலை ஐம்பொன்னால் செய்யப் பட்டதாகும். இதன் மதிப்பு ரூ.25 இலட்சம். கடத்திவரப்பட்ட முருகன் சிலையை தமிழகத்தில் ஒரு கடத்தல் கும்பல் பதுக்கி வைத்து விற்பதற்காக விலை பேசி வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை பொலிஸார் தமிழகம் முழுவதும் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். அப்போது, சீனிவாசன் (வயது 58) என்பவர் இதனை சட்டவிரோதமான முறையில் விற்க முனைவது கண்டறியப் பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் தரகர்கள் போன்று மாறுவேடத்தில் சென்று கடத்தல்காரன் சீனிவாசனை சந்தித்தனர். ரூ.20 இலட்சம் தருவதாகவும், குறிப்பிட்ட முருகன் சிலையோடு நாமக்கல் பஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்றும் கோரிக்கையை சீனிவாசன் தெரிவித்து ள்ளதை அடுத்து அங்கு தனிப்படை பொலிஸார் சென்று சீனிவாசனை மடக்கி பிடித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment