Thursday, June 19, 2008

யுத்தத்தில் தங்களால் வெல்ல முடியும் என்கிறார் நடேசன்


ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அல்லது செயற்படாமல் வைத்துவிட்டு பேச்சுக்கு வருமாறு இலங்கை அரசு முன்வைத்த வேண்டுகோளை விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன் அடி யோடு நிராகரித்துள்ளார்.அரச படையினருடனான யுத்தத்தில் இன்னும் தங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.
"ரொய்ட்டர்' செய்திச் சேவைக்கு வழங் கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இவற்றைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்துறைப் பொறுப்பாளர் தமது பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
ஆயுதங்களை ஒப்படைப்பது பேச்சுக ளின் போது பேரம் பேசும் சக்தியைப் பல வீனப்படுத்தும்.
அதிகார சமநிலையையும் சம அந்தஸ் தையும் குழப்பும் எந்த அணுகுமுறையும், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெறக் கூடிய எந்தப் பேச்சுக்கும் எதிர்மறையான விளை வைத் தருவதாகவே அமையும்.அதிகார சமநிலையும் சம அந்தஸ்தும் அர்த்த பூர்வ மான பேச்சுகளுக்கு மிக முக்கியமானவை.
விடுதலைப் புலிகள் தற்போது தற்பாதுகாப்பு யுத்தத்திலேயே ஈடுபட்டுள்ளனர். எமது தமிழ் மக்களின் துணையுடன் நாம் இந்த யுத்தத்தில் வெல்வோம் என்ற நம்பிக் கை எமக்குண்டு.
விடுதலைப் புலிகளை மரபு ரீதியான யுத்தத்தில் அரசினால் தோற்கடிக்க முடி யாது என்றார்.
"மரபுவழி இராணுவம் வெற்றி பெறத் தவறினால் அது தோற்கின்றது. விடுதலை இராணுவம் தோற்காவிட்டால் அது வெற்றி பெறுகின்றது' என்ற நெப்போலியனின் கூற்றையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கும் பேச்சுக்கான தெளிவான கால எல்லையை அறிவிப்பதற்கும் இணங் கினால் தான் பேச்சுக்குத் தயார் என அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது தெரிந்ததே.
அதற்கே இப்போது அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ரொய்ட்டருக்கு வழங்கிய பேட்டியில் பதிலளித்திக்கிறார்.

No comments: