நல்லூர், வைமன் வீதியில் வசித்த உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பணி புரிந்த ஆசிரியை ஒருவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதை அடுத்து அவரது சட லத்தை மீள் பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துமாறு யாழ். மாவட்ட நீதிபதி இ.வசந்தசேனன் நேற்றுப் பொலீஸாருக்கு உத்தரவிட்டார்.
வைமன் வீதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆசிரியையான விஜயானந்தி ஜெக தீஸ்வரன் என்ற குடும்பப் பெண் எரிகாய முற்று மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டு யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு அங்கு மரணமானார்.
அவரது மரணம் தொடர்பாக விசார ணைகளை மேற்கொண்ட நீதிபதி இ.வசந்த சேனன் சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடுகளையடுத்து பிரேத பரிசோத னையின் பின் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
விஜயானந்தியின் மரணம் குறித்து மரணமானவரின் பெற்றோர் செய்த முறைப் பாட்டையடுத்து விரிவான விசாரணை நடத்தப்பட் டது.
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியை தமக்கு தாமே தீமூட்டி மரண மானார் என்று அவரது கணவரின் தரத்திப் பினர் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்த னர். ஆனால், தமது மகள் நல்ல சுக தேகியாக இருந்தார் என்றும் அவரை வேறு யாரோ எரியூட்டி கொலை செய்திருக்க வேண்டும் என்றும் ஆசிரியையின் பெற்றோர் நீதிமன் றத்துக்கு தெரிவித்தனர். அதற்கு ஆதார மாக ஆசிரியைக்கு நூல் கட்டியதாகக் கூறப் படும் இரு ஆலய குருக்கள்மாரை சாட்சிக ளாக நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.
ஆசிரியை விஜயானந்தி ஆரோக்கிய மாக இருந்தார், திருஷ்டி கழிப்பதற்காகவே நூல் கட்ட வந்தார் என குருக்கள்மார் இரு வரும் நீதிபதியிடம் சாட்சியம் அளித்திருந் தனர். அதனையடுத்து ஆசிரியை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பதைக் கண்டறிவதற்காக மீள் பிரேத பரிசோதனைக்கு நீதிபதி வசந்த சேனன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
நாளை வியாழக்கிழமை சடலத்தை தோண்டி எடுத்து பிரதம சட்ட வைத்திய அதிகாரி மூலம் பிரேத பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment