இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ள மடுமாதா ஆலயத்தில் ஆடி மாதத் திருவிழாவைக் கொண்டாடுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஆயர்கள் சங்கம், மடுமாதா ஆலயத்தின் திருத்த வேலைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள மாதாவின் திருவுருவச் சிலை இன்னும் ஆலயத்திற்குக் கொண்டு வரப்படாத நிலையில் இம்முறை மடுமாதாவின் ஆடித்திருவிழாவைக் கொண்டாட முடியாதிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.
எனினும், மடுமாதாவின் திருவிழா திருப்பலிப் பூசைகளை மன்னார் மறைமாவட்டப் பங்கில் உள்ள ஆலயங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்கள் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment