Tuesday, June 17, 2008

தலைவரின் தலை வன்னியில் இராணுவத்திற்கு தெரிகின்றதாக தாளம் போடும் போகல்லாகம்மா

இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை மீட்டுவிட்டோம். 8 மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. தற்போது அதை இரண்ரை மாவட்டங்களாக குறைத்துவிட்டோம். இதன் காரணமாக, புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்கி வருகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது. எனவே, அரசியல் தீர்வு காண்பதற்கு புலிகள் முழுமையான ஈடுபாட்டை வழங்க வேண்டும். இந்தியா-இலங்கை கடல் பகுதியில் நுழையும் இரு நாட்டு மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, டெல்லி வந்த இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித போகல்லம்மா தெரிவித்தார். ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித போகல்லம்மா, பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு மந்திரி பிரணாப்முகர்ஜி ஆகியோரை சந்தித்து இலங்கை அரசியல் நிலவரங்களை விவரித்தார். இலங்கையில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் தெற்காசிய நாடுகள் மாநாட்டில் (ஹசார்க்) கலந்துகொள்ளும்படி, இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே சார்பில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவர் அழைப்பு விடுத்தார். இரு நாடுகளின் கடல் பகுதியில் அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது தவிர்க்க முடியாத நேரங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது. மீனவர்களின் போர்வையில் ஊடுருவும் தீவிரவாதிகளை ஒடுக்க இத்தகைய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரத்தில் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை பாதுகாக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும். இலங்கையில் ஏற்பட்டு வரும் ஒரு சில வன்முறை சம்பவங்களால் ஹசார்க் மாநாட்டு பாதுகாப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார் ரோகித போகல்லம்மா கூறினார்.

No comments: